விண்கல்லால் பூமிக்கு ஏற்படும் பெரிய ஆபத்து?!! 2008 ஜி.ஓ.20 என பெயரிட்ட விஞ்ஞானிகள்!!

0
254

விண்கல்லால் பூமிக்கு ஏற்படும் பெரிய ஆபத்து?!! 2008 ஜி.ஓ.20 என பெயரிட்ட விஞ்ஞானிகள்!!

நமது பூமியை நோக்கி இராட்சத விண்கல் ஒன்று வந்து கொண்டு உள்ளதாக தகவல் வெளிவந்து இருக்கின்றது. விண்வெளியில் லட்சக்கணக்கான விண்கற்கள் உள்ளன. இதுவரை பூமியை பதினோரு லட்சம் விண்கற்கள் சுற்றி வருவதாக கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றது. இந்த நிலையில், விண்கற்களின் அளவில் பெரிய பாறை முதற்கொண்டு குன்று அளவிலும் பெரியதாகவே இருக்கும்.

விண்கற்கள் பூமியின் அருகே கடந்து செல்லும் போது பூமி மீது விழுந்துள்ளது. பெரும்பாலும் பூமியில் விண்கல் ஒன்று பூமியை நோக்கி வரும் போது, உராய்வு காரணமாக தீப்பிடித்து எரிந்து கொண்டே வரும். அதன் காரணமாகவே கற்கள் பூமியை நோக்கி வந்து விழும்போது சாம்பலாகி விடும். மேலும், கற்கள் எரிந்த நிலையிலேயே பூமிக்கு வருவதால் இரவு நேரத்தில் வானத்தில் தீப்பிடித்து எரிந்து கொண்டு ஏதோ ஒன்று நகர்வதைப் போல நாம் பார்க்க முடியும்.

இந்த விண்கற்கள் எரிவதுதான் நமக்கு அவ்வாறு தெரியும். தற்போது பூமியை நோக்கி விளையாட்டு மைதானம் அளவில் ராட்சத விண்கல் ஒன்று கொண்டிருப்பதாக தகவல் வெளிவந்திருக்கின்றது. 24ஆம் தேதி அருகில் வரக் கூடும். இந்த விண்கல் 2008 ஜி.ஓ. 20 என்று பெயரிட்டு உள்ளனர்.

இருந்தாலும் விண்கல்லால் பூமிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர். பூமியிலிருந்து 59 லட்சத்து 38 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் செல்வதால் பூமியின் புவியீர்ப்பு விசைக்கு வராது என்றும் இந்த ராட்சத விண்கல் பூமிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவித்திருக்கின்றனர்.

Previous articleசிவப்பு உடையில் அள்ளுது கவர்ச்சி!! சாக்ஷி அகர்வாலின் அசத்தலான புகைப்படம்!!
Next articleவிட்டிருந்தால் அடித்து இருப்பாரோ? மைதானத்தில் கடும் கோபத்தில் இலங்கை அணியின் பயிற்சியாளர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here