என் கைபேசியை யாராலும் ஒட்டு கேட்க முடியாது!! கேமராவை டேப் போட்டு ஒட்டி வெச்சிட்டன்!! மம்தா பேனர்ஜி!!
இந்தியாவில் கடந்த சில நாட்களாக பெகாசஸ் விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் கடைபிடிக்கப்பட்டு வரும் தியாகிகள் தினத்தையொட்டி நாடு முழுவதும் உள்ள மேற்குவங்க மக்களிடம் வீடியோ மூலம் மம்தா பானர்ஜி உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது: பெகாசஸ் மென்பொருள் மிகவும் ஆபத்தான ஒன்றாகும். ஊடகம், நீதித்துறை, தேர்தல் ஆணையம் போன்றவற்றின் மூலம் தான் ஜனநாயகத்தை உருவாக்க முடியும். இவை மூன்றையும் இந்த மென்பொருள் கைப்பற்றி விட்டது.
இந்த விவகாரத்தால் சரத் பவார், டெல்லி முதல்-மந்திரி, கோவா முதல் மந்திரி ஆகியோரிடம் என்னால் பேச முடியாமல் இருக்கும் நிலை உள்ளது. திரையில் தெரியாத மென்பொருளை எனது கைப்பேசியில் பொருத்தி உள்ளார்கள். கைபேசியில் உள்ள ஆடியோ மற்றும் வீடியோ மூலமாக இந்த உளவு பார்க்கும் வேலை நடைபெறுகிறது. எனவே நான் எனது கைபேசியில் கேமரா பகுதியை டேப் போட்டு மூடி வைத்துள்ளேன் என தனது கைப்பேசியை உயர்த்தி காட்டி கூறினார். மேலும் அவர் இந்த மத்திய அரசை அடக்கி வைக்க வில்லை என்றால் இந்திய நாடே அழிந்துவிடும் கூட்டாட்சி கட்டமைப்பை பாஜக அரசு தரைமட்டமாக ஆக்கியுள்ளது என்று கூறினார்.
இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் உச்சநீதிமன்றம் தான் காப்பாற்ற வேண்டும். முக்கிய தலைகளின் கைப்பேசிகள் உளவு பார்க்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து இந்த விவகாரத்தை பற்றி விசாரிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும், இந்த விசாரணை குறித்து ஆணையம் அமைக்க வேண்டும். ஜூலை 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் அவர் டெல்லிக்கு செல்ல இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடந்தால் அதிலும் கலந்து கொள்வேன் என்றும் கூறினார்.