கத்தரித்து விடுவேன் என வெளியிட்ட வீடியோவால் அதிரடி காட்டிய போலீசார்! தலைவிக்கே இந்த நிலையா?

Photo of author

By Hasini

கத்தரித்து விடுவேன் என வெளியிட்ட வீடியோவால் அதிரடி காட்டிய போலீசார்! தலைவிக்கே இந்த நிலையா?

தமிழர் முன்னேற்ற படை கட்சியின் நிறுவனத் தலைவராக இருந்து வருபவர் வீரலக்ஷ்மி. 35 வயதான இவர் சென்னை ராமாபுரம் ஈஸ்வரன் கோவில் தெருவில் வசித்து வருகிறார். இவர் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பல்லாவரம் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு காரில் அனகாபுத்தூர் நோக்கி சென்றபோது, அவரது வாட்ஸ் அப் எண்ணுக்கு ஆபாச வீடியோக்கள் வந்தது. இது சம்பந்தமாக பரங்கிமலை துணை கமிஷனரிடம் புகார் தெரிவித்தார்.

அந்த புகாரானது, சங்கர் நகர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. போலீசார் இந்த மனுவை எடுத்து வழக்குப்பதிவு செய்து ஆபாச வீடியோ அனுப்பியவர் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே தேர்தல் நாளன்று தனக்கு ஆபாச வீடியோ அனுப்பிய நபரை கண்டுபிடித்து தரவும், அதை கண்டிக்கும் விதமாகவும் சென்னை விமான நிலையம் அருகே, ஜி.எஸ்.டி சாலை ஒட்டியுள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தினார்.

அதனை தொடர்ந்தும் மேலும் சிலர் அவரது வாட்ஸ் அப் எண்ணுக்கு தொடர்ந்து அந்த மாதிரியான வீடியோக்களை அனுப்பி வந்தனர். மேலும் சிலர் வீடியோ காலிலும் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இது பற்றி அவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் வீரலட்சுமி தளராத மனதுடன் கையில் அருவாளை வைத்துக் கொண்டு தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைக்கு நீதி கேட்டு கடந்த சில தினங்களாக அவரும் வாட்ஸ் அப் மூலம் வீடியோ எடுத்து வெளியிட்டு இருந்தார்.

அதில் ஆபாச வீடியோ அனுப்பியவர்களுக்கு, கடும் எச்சரிக்கை விடும் வகையில் பேசியிருந்தார். அந்த வீடியோவின் மூலம் எனக்கு ஆபாச வீடியோ அனுப்பியவர்கள் 15 நாட்களுக்குள் கோர்ட்டில் அல்லது போலீசில் சரண் அடைந்து விடுங்கள். இல்லை என்ற பட்சத்தில் என்னிடமோ அல்லது என் தொண்டர்களிடமோ சிக்கினால் நான் வெட்டி விடுவேன். என்றும் சட்டசபை தேர்தல் நேரத்தில், வந்த ஆபாச வீடியோ குறித்து பரங்கிமலை துணை கமிஷனரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததன் காரணமாகவும், அதன் பிறகும் தனக்கு வீடியோக்கள் வந்ததால், போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளேன்.

அதிலும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதன் பிறகு கூட சிலர் வீடியோகால் மூலம் நிர்வாணமாக நின்று பேசுறீங்க. எனக்கு பணபலம் உள்ளது, ஆள்பலம் உள்ளது தமிழக பெண்களின் மானம் என்ன அவ்வளவு கேவலமா? உங்களுக்கு எல்லாம் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்  என ஆவேசமாக பேசி இருந்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. செய்தி சேனல்களில் கூட அவரது அந்த செய்திகளை காட்டி வந்தனர். இந்த நிலையில் அந்த மாதிரியான வீடியோ அனுப்பியவர் குறித்து, சங்கர் நகர் போலீசார் நடத்திய விசாரணையில், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுக்கா கரையைச் சேர்ந்த, ஆசாமி ஆரோக்கியசாமி என்பது தெரிய வந்தது.

36 வயதான இவர் கேரளாவில் பதுங்கி இருந்தார். அவரை போலீசார் அதிரடியாக கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். இது தவிர மேலும் சில வாட்ஸ்அப் எண்களில் இருந்தும் ஆபாச வீடியோக்கள் வந்ததாக வீரலட்சுமி கூறியிருக்கிறார். அவர்கள் யார் என்பது பற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.