இன்று முதல் தமிழகத்தில்…மக்களை தேடி மருத்துவம் திட்டம்!! அரசின் சூப்பர் திட்டம்!!
தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு வந்த போதிலிருந்தே கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பலவிதமான வழிமுறைகளை செய்து வருகிறார். அத்துடன் தமிழ்நாட்டில் இருந்து கண்டிப்பாக கொரோனாவை விரட்டுவோம் என்று அவர் கூறியுள்ளார்.
இதனை அடுத்து பல நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு உள்ளார். மேலும், வேலை இல்லாதோருக்கு அரசு மூலமாக வேலையும் கிடைத்து வருகிறது. மக்களின் அனைத்து வித பிரச்சனைகளுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்வு கண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழக மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று வரக்கூடாது என்பதற்காக தேர்வு அனைத்தையும் ரத்து செய்து உள்ளார்.அத்துடன் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.
இது மட்டுமல்லாமல் பெண்களுக்கு பல சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றது. பின் மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.
இந்த நிலையில், தலைமைச் செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்திருக்கிறார். காலை 10 மணி அளவில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்க இருக்கின்றனர்.
வீடு தேடி வரும் வாகனம் மூலமாக மருத்துவ சேவை அறிக்கை திட்டம் வரவேற்கப் பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து வாகனத்தில் மருத்துவர் மற்றும் செவிலியர், மருத்துவ உதவியாளர் போன்றார் மக்களை தேடிச்சென்று பொது மருத்துவம் செய்ய இருக்கின்றனர்.