அனைவரும் தற்போதைய காலகட்டத்தில் மொபைல் போன்களை பயன்படுத்தி வருகின்றனர். அத்துடன் தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் மொபைல் போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது.
செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்களது தேவைக்கு ஏற்றது போல் பல செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் தான் அதிகளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அதில் வாட்ஸ் அப் செயலியை அனைத்துவிதமான உரையாடல்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. தகவல் பரிமாற்ற செயலியாக மட்டும் இல்லாமல் ஆடியோ, வீடியோ கால், வீடியோ, லொகேஷன் ஷேரிங் போன்ற பல வசதிகள் இதில் உள்ளன.
இதில் சிறப்பு அம்சங்கள் இருப்பது போல் பல பிரச்சினைகளும் உள்ளன. உங்கள் மொபைல் நம்பரை சேவ் செய்யாமல் எஸ்எம்எஸ் அனுப்பும் வசதி இருக்கின்றது. அதற்கு நீங்கள் நேரடியாக உங்கள் மொபைல் போனில் வாட்ஸ்அப் பயன்படுத்தாமல் மொபைல் போன் வெப் பிரவுசர் மூலமாக வாட்ஸ்அப் சேட் செய்யலாம்.
அதற்கு வெப் பிரவுசரை ஓபன் செய்து https://wa.me/PhoneNumber என்பதை டைப் செய்ய வேண்டும். இங்கே PhoneNumber என்பது நீங்கள் அனுப்பப்பட வேண்டிய மொபைல் நம்பர்.