முன்னாள் அமைச்சர் மீது சொத்து குவிப்பு வழக்கு!! சிக்கிய முதல் அதிமுக தலை!! அடுத்து யார்?!!

0
123

முன்னாள் அமைச்சர் மீது சொத்து குவிப்பு வழக்கு!! சிக்கிய முதல் அதிமுக தலை!! அடுத்து யார்?!!

அதிமுக ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆவார். அத்துடன் இவர் தனது வீட்டில் கோடிக்கணக்கில் சொத்துக்களை வாங்கி கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

2010 ஆம் ஆண்டு முதல் ஆண்டு 2016 ஆம் வரையில் தமிழகத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாகவும், போக்குவரத்து துறையில் அனேக ஊழல்களை செய்திருப்பதாகவும், குற்றச்சாட்டு எழுந்து வந்தது.

இந்த சூழ்நிலையில், அவர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டு நேற்றைய தினம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரணை செய்தார்கள்.இதனை அடுத்து கரூரில் உள்ள அவருடைய வீடு மற்றும் அவருக்கு சொந்தமான பல இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

விஜயபாஸ்கர் அவர்கள் வீட்டில் நடந்த சோதனையில் 25 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை முன்பு தெரிவித்து இருந்தது.அதில் பல முக்கிய ஆவணங்களும், சொத்துக்களின் ஆவணங்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் செய்யப்பட்ட முதலீடுகள், நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் சிக்கின.

இதனையடுத்து தற்போது எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது 50 சதவீதம் அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கின்றது.2016இல் ரூபாய் 2.5 கோடி மற்றும் 2021இல் ரூபாய் 8.62 கோடி என மொத்தமாக 50 சதவீதம் அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

இதனை அடுத்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவருடைய மனைவி விஜயலட்சுமி, அவருடைய சகோதரர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கின்றது.

Previous articleவாட்ஸாப்பில் நம்பர் சேவ் பண்ணாமலே மெசேஜ்!! எப்படின்னு தெரியுமா?!!
Next articleமருத்துவர் ராமதாஸுக்கு 83 வது பிறந்த நாள்! பிரதமர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து