வனிதாவின் கழுத்தில் தாலிகட்டிய பவர்ஸ்டார்!! தீயாக பரவும் போட்டோ!!
தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியின் மூலமாக மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் தான் வனிதா. மேலும் இவர் ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்றார்.
நடிகை வனிதா கடந்த வருடம் பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து பின் சில காரணங்களால் இருவரும் பிரிந்து விட்டனர். தற்போது நடிகை வனிதா அவர்கள் திரைப்படங்களிலும், தொலைக்காட்சி சீரியல்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில், வனிதா பவர் ஸ்டாருடன் மாலை மாற்றிக் கொண்ட புகைப்படம் இணையத்தில் மிகவும் வைரலாக பரவி இருந்தது. மேலும் நான்காவதாக திருமணம் செய்து கொண்டதாக ஒரு தகவல் பரவியது.
இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் அதிர்ந்து இருந்தனர். இதனை தொடர்ந்து இந்த புகைப்படத்தில் முன், மாலை மாற்றிக்கொள்வது போல இருந்தது. தற்போது அதே திருமண கோலத்தில் பவர்ஸ்டார் வனிதா அவர்கள் கழுத்தில் தாலி கட்டுவது போல புகைப்படம் வெளியாகி இருக்கின்றது.
இந்த புகைப்படங்கள் அனைத்தும் திரைப்படத்தின் பிரமோஷனுக்காக மட்டுமே வெளியிட பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன் விளம்பரத்திற்காக வெளியிடப்பட்டது.