சட்டசபை தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் படுதோல்வி, தனிப்பட்ட முறையில் டிடிவி தினகரனின் தோல்வி உள்ளிட்டவற்றில் நீண்டகால மௌனத்தின் இருந்த அவர் திடீரென்று தற்சமயம் மேகதாது அணைக்கு எதிராக ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி தஞ்சாவூரில் ஒரு மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை அறிவித்திருக்கிறார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தோல்விக்கு பிறகு அந்த கட்சியை சார்ந்த பல மாவட்ட செயலாளர்கள் திமுகவிற்கும், அதிமுகவிற்கும் சென்று விட்டார்கள். இந்த சூழ்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செய்தி தொடர்பாளர் தாம்பரம் நாராயணன் அந்த கட்சியில் இருந்து வெளியேறினார். அவர் டிடிவி தினகரன் அவர்கள் எழுதிய கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பல பொறுப்புகளில் தாங்களே பாராட்டும் விதமாக சிறப்பாக செயல்பட்டு சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் தாங்கள் கடைபிடிக்கும் நீண்ட செயலற்ற நிலையில் என்னை போன்ற தீவிரமாக செயல்பாடு இருப்பவர்களுக்கு ஏற்புடையது அல்ல. ஆகவே கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகிக் கொள்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.
அதோடு பலரும் அவ்வபோது சொல்லி வந்த தகவலை தினகரனுக்கு கடிதம் மூலமாக உடைத்து சொல்லிவிட்டு கிளம்பி விட்டார் தாம்பரம் நாராயணன். தேர்தல் முடிவுக்குப் பின்னர் சசிகலா தினகரனை அழைத்து நான் இப்போதும் சொல்வதை தான் இப்போதும் சொல்கின்றேன் அதிமுக தான் நம்முடைய கட்சி இரட்டை இலை தான் நம்முடைய சின்னம் இதன் காரணமாக, இந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பணிகளை எல்லாம் அப்படியே வைத்து விடு என்று தெரிவித்திருக்கிறார். அதன் அடிப்படையில்தான் டிடிவி தினகரன் சிறிது நாட்கள் அமைதியாக இருந்தார். வழக்கமாகவே அவர் நிர்வாகிகளுடன் பேசுவது கடினம் ஆனாலும் தோல்விக்குப் பின்னரும், சசிகலாவின் அறிவுரைக்கு பின்னரும், அமைதியாகவே இருந்து விட்டார். இந்த இடைப்பட்ட காலத்தில்தான் அமமுகவிலிருந்து பழனியப்பன் போன்ற முக்கிய நிர்வாகிகள் கழன்று விட்டார்கள்.
இந்த நிலையில்தான் திடீரென்று தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகளை அழைத்து ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். திடீர் தினகரன் அதோடு தலைமை தாங்குவதற்கு தானே வருவதாகவும் அவர் சொல்லியது அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தஞ்சாவூரில் இருந்தும் சில நிர்வாகிகள் மாற்றுக் கட்சிக்கு செல்ல தயாராகி வந்த நிலையில், தினகரனின் இந்த ஆர்ப்பாட்ட அறிவிப்பு வந்திருக்கிறது.