திடீரென ஏற்பட்ட சோகம்!! மனமுடைந்த ஹிப்ஹாப் ஆதி!!

Photo of author

By CineDesk

திடீரென ஏற்பட்ட சோகம்!! மனமுடைந்த ஹிப்ஹாப் ஆதி!!

CineDesk

Sudden tragedy !! Heartbroken Hip Hop Adi !!

திடீரென ஏற்பட்ட சோகம்!! மனமுடைந்த ஹிப்ஹாப் ஆதி!!

ஹிப்ஹாப் தமிழா என்பது ஒரு தமிழ்நாட்டு தமிழ் சொல்லிசை இசைக் குழு ஆகும். இதில் ஆதியும், ஜீவாவும் முக்கிய கலைஞர்கள் அவர்கள். 2015 இல் இருந்து இவர் தமிழ்த் திரைப்படங்களில் இசையமைத்து வருகிறார். இவர் பல பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் ஆம்பள திரைப்படத்தின் வழியாக திரைக்கு அறிமுகமானார். இவர்கள் இந்தியாவில் தமிழ் சொல்லின் முன்னோடி இசைக் குழுக்களில் ஒன்றாக கருதப்படுகின்றனர்.

கோயம்புத்தூரைச் சேர்ந்த ஆதி பள்ளி நாட்களில் கவிதை எழுதுவதில் ஆர்வம் கொண்டவராகவும், ராப் இசையால் ஏற்கப்பட்ட வராகவும் இருந்தார். ஓய்வு நேரங்களில் வீட்டில் இருந்து கணினியின் இசைக் கோர்வை மென்பொருளை நிறுவி தான் எழுதிய பாடலைப் பாடி ஏதாவது பதிவு செய்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 2005ல் யூடியூப் இந்தியாவில் அறிமுகமாகிய போது அதில் தன் பதிவு செய்து பாடல்களை ஹிப்ஹாப் தமிழா என்ற பெயரில் பதிவு செய்தார். அந்த நேரத்தில் ஆர்க்குட் வழியாக சென்னையை சேர்ந்த ஜீவா உடன் நட்பு ஏற்பட்டது. இருவரும் இசையில் ஆர்வம் உள்ளவர்கள். இருவரும் இசை சம்மந்தமான நூல்களைப் படிப்பது, யூடியூப் டுட்டோரியல் வழியாக கீபோர்ட் வாசிக்க கற்றுக் கொள்வது என கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் தீவிரமாக இசையில் இறங்கி தங்களுடைய பாடல்களை யூடியூபில் பதிவேற்றி வந்தனர்.

இந்நிலையில் தற்போது அந்த யூடியூப் பக்கத்தை இரண்டு மில்லியன் ரசிகர்கள் சப்ஸ்கிரைப் செய்து உள்ளனர். மேலும் அந்த யூடியூப் பக்கத்தை தற்போது யாரோ ஒரு அடையாளம் தெரியாத நபர் ஹேக் செய்துள்ளார் என்ற தகவல் வந்துள்ளது. மேலும் அந்த பக்கத்தின் பெயரையும் தற்போது மாற்றி வைத்துள்ளார் எனவும் கூறப்படுகிறது. அந்த பக்கத்தின் பெயர் அல்கோரண்ட் சோஷியல் நியூஸ் என்ற பெயரில் உள்ளது. இதனால் ஹிப்ஹாப் ஆதி மிகவும் வருத்தத்துடன் இந்த செய்தியை தெரிவித்துள்ளார். இதற்கு இவரின் ரசிகர்கள் பெருமளவு ஆறுதல் கூறி வருகின்றனர்.