டெல்லி பயணம்! பத்திரிக்கையாளர்களிடம் மழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர்!

0
123

அதிமுகவின் இனை ஒருங்கினைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார் அப்போதுஅவர்களுடன் தளவாய் சுந்தரம், ரவீந்திரநாத் உள்ளிட்டோர் உடன் இருந்தார்கள் அந்த சந்திப்பிற்கு பின்னர் ஓபிஎஸ் ,இபிஎஸ் உள்ளிட்டோர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்து இருக்கிறார்கள்.

அப்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்ததாவது, தமிழ்நாட்டிற்கு தேவையான தடுப்பு ஊசிகளை வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தி இருக்கின்றோம். மேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது எனவும், அந்த அணை கட்டப்பட்டால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் பாலைவனம் ஆகிவிடும் என்றும், தெரிவித்து இருக்கிறோம் என கூறியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர். தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தெரிவித்து இருக்கின்றோம், கோதாவரி மற்றும் காவேரி நதிகளை இணைப்பதற்கான திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய அவர் கட்டுக்கோப்பாக இயங்கிவரும் இயக்கம் அதிமுக கட்சித் தலைமை மீது எந்த ஒரு தொண்டருக்கும் அதிர்ச்சி எதுவும் கிடையாது லாட்டரி சீட்டுகளை தமிழ்நாட்டில் கொண்டுவருவதற்கு திமுக அரசு திட்டமிட்டு இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அதனடிப்படையில் அறிக்கை வெளியிட்டு வருகின்றோம் என்று தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து அவரிடம் பத்திரிக்கையாளர்கள் சசிகலா தொடர்பாக கேள்வியை எழுப்பினார்கள் அதற்க்கு பதில் அளிக்க மறுத்த எடப்பாடி பழனிச்சாமி நன்றி என தெரிவித்துவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

Previous articleஇந்தியாவில் நோய்த்தொற்று நிலவரம்! புதிதாக 39 ஆயிரத்து 361பேருக்கு நோய்தொற்று!
Next articleகுக் வித் கோமாளி தர்ஷா குப்தாவின் திருமணத்திற்கு பின் முதல் வீடியோ!! ரசிகர்கள் பேரதிர்ச்சி!!