விபத்தில் சிக்கிய யாஷிகாவைப் பற்றி அவரது தங்கை வெளியிட்ட அதிர்ச்சி பதிவு!!

0
213

விபத்தில் சிக்கிய யாஷிகாவைப் பற்றி அவரது தங்கை வெளியிட்ட அதிர்ச்சி பதிவு!!

யாசிகா ஆனந்த், தமிழ் சின்னத்திரையின் பிக்பாஸ் முக்கிய நடிகை ஆவார். அத்துடன் யாஷிகா ஆனந்த் தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமாக பிரபலமானார். இதைத் தொடர்ந்து துருவங்கள் பதினாறு என்ற திரைப்படம் மூலம் அறியப்பட்டார்.

இதற்கு பின், யாஷிகா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 2என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, அவருக்கு எந்த ஒரு விதமான பட வாய்ப்பும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், அவர் தற்போது எஸ்.ஜே.சூர்யாவுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து மாமல்லபுரம்-புதுச்சேரி ஈசிஆர் சாலையில் இரவு அதிவேகமாக யாஷிகா காரை இயக்கியுள்ளார். இரவு 11:45 மணி அளவில் சூலேரிக்காடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, சாலையில் உள்ள தடுப்பினில் மோதி கார் கட்டுப்பாட்டை இழந்து வலது பக்கமாக சென்டர் மீடியனில் மோதி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.

இதனை தொடர்ந்து கார் பலத்த சேதமடைந்தது. அத்துடன் யாஷிகாவின் தோழி பவானி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காரை ஓட்டி வந்த யாஷிகாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பின் இருக்கையில் அமர்ந்து இருந்த ஆண்கள் சிறு காயத்துடன் உயிர் தப்பினர்.

இந்த விபத்து காரணமாக யாஷிகா ஆனந்த் மீது அதிகமாக கார் இயக்கியது, உயிர்சேதம் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும், யாஷிகாவின் ஒருவர் உரிமமும் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், யாஷிகாவின் நிலை குறித்து அவருடைய தங்கை கூறி உள்ளார். அவரது அக்காவின் நிலை குறித்து ஓஷினா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். அந்த பதிவில் அவர், யாஷிகா ஆனந்த் நலம் பெற பிரார்த்தனை மேற்கொண்ட அனைவருக்கும் மிக்க நன்றி என்றும், யாஷிக தற்போது சுயநினைவிற்கு வந்து உள்ளார்.

விபத்தில் சிக்கிய யாஷிகாவைப் பற்றி அவரது தங்கை வெளியிட்ட அதிர்ச்சி பதிவு!!

அவருக்கு ஒரு சர்ஜரி முடிந்து விட்டது. தற்போது அவர் ஐசியூவில் தான் உள்ளார் அவரது உடலில் பல எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதன் காரணமாக, அறுவை சிகிச்சை வரும் தினங்களில் ஒவ்வொன்றாக நடைபெற இருக்கின்றது. தயவுசெய்து அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று அவர் கூறியிருக்கின்றார்.

Previous articleவாகன ஓட்டிகள் மகிழ்ச்சி! அதே நிலையில் நீடிக்கும் பெட்ரோல் டீசல் விலை!
Next articleப்பா…’யார்ரா அது இவ்ளோ அழகா இருக்காங்க’ பாக்கியலட்சுமி ஜெனியின் பிளாக் அண்ட் வொயிட் போட்டோ!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here