அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் உள்ளிட்டோர் சில தினங்களுக்கு முன்னர் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசி இருக்கிறார்கள். அதோடு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்து பேசி இருக்கிறார்கள் இந்த சந்திப்பின்போது சசிகலா விவகாரம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல் கிடைத்திருக்கிறது.
அதாவது சசிகலாவை பொறுத்தவரையில் அதிமுக தொண்டர்கள் இடையே தொலைபேசியில் உரையாடி அதன் ஆடியோவை அடிக்கடி அவர் வெளியிட்டு வருகின்றார். அதோடு விரைவில் அவர் தொண்டர்களை நேரில் சந்திக்க இருப்பதாகவும், சொல்லப்படுகிறது. இதன்மூலம் சசிகலாவின் அடுத்த திட்டம் என்னவாக இருக்கும் என்று யோசித்தால் அது மெல்ல மெல்ல முன்னேறி அதிமுகவை கைப்பற்றுவது தான் என்கிறார்கள்
இதுவரையில் தொண்டர்களுடன் தொலைபேசியில் பேசிய அந்த சசிகலா தொண்டர்களை நேரடியாக சந்திக்க இருப்பதாக சொல்லப்பட்டதால் அதிமுகவின் தலைமை அதிர்ச்சிக்கு உள்ளானதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக தான் சசிகலாவின் கை ஓங்கி விடக்கூடாது என்ற காரணத்திற்காக இபிஎஸ், ஒபிஎஸ் உள்ளிட்டோர் டெல்லிக்கு விரைந்து பிரதமர் நரேந்திர மோடியையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும், நேரில் சந்தித்து ஆலோசனை செய்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
அதிமுகவின் பொதுச் செயலாளர் என்ற பதவியில் இருந்து தன்னை நீக்கிய பொதுக்குழுவில் தீர்மானம் செல்லாது என்று சசிகலா போட்ட வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அதிமுகவின் தலைமை டெல்லிக்கு சென்று பேசி இருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு செயலாக பார்க்கப்படுகிறது.
அதோடு அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இப்படியான நிலையில், அதிமுகவின் அவைத் தலைவர் பதவி யாருக்கு என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ஆகவே எடப்பாடி பழனிச்சாமிக்கு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படலாம் என்று தெரிகிறது. அதோடு ஓபிஎஸ் அவர்களுக்கு அவைத்தலைவர் பதவியையும் கொடுப்பதற்கு அதிமுக தலைமை முடிவு செய்து இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.