பெட்ரோல் மற்றும் டீசல் விலை! குதூகலத்தில்வாகன ஓட்டிகள்!

0
108

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த விதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்யும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் ஏறி, ஏறி இறங்கிய நிலை தற்போது சற்றே மாறி இருக்கிறது. இது வாகன ஓட்டிகளை சற்றே நிம்மதி அடைய செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், சென்னையில் 14வது தினமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 102 ரூபாய் 49 காசுக்கும் ஒரு லிட்டர் டீசல் விலை 94 ரூபாய் 39 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை நிலவரம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்ததாக சொல்லப்படுகிறது. தொடர்ச்சியாக ஏழு முகத்திலேயே இருந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தற்சமயம் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடித்து வருவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

Previous articleசொந்த கட்சியையே ஆட்டம் காண வைக்கும் அண்ணாமலை! அதிர்ச்சியில் பாஜக தேசிய தலைமை!
Next articleதிமுக அமைச்சரின் மருமகள் சர்ச்சை பேச்சு! நடவடிக்கை எடுப்பாரா முதலமைச்சர்?