உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனம், பிரபலமான நிறுவனங்களை கடந்த சில ஆண்டுகளாக விலைக்கு வாங்கி வரும் நிலையில் அமெரிக்காவில் புகழ் பெற்ற ஒரு நிறுவனத்தை சுமார் 15ஆயிரம் கோடி விலை கொடுத்து வாங்கியுள்ளது
அமெரிக்காவை சேர்ந்த புகழ்பெற்ற ஃபிட்பிட் என்ற நிறுவனத்தை 2.1 பில்லியன் விலை கொடுத்து கூகுள் விலைக்கு வாங்கியுள்ளது. இந்த தொகை இந்திய மதிப்பில் சுமார் 14 ஆயிரத்து 840 கோடி ரூபாய்க்கு என்பது குறிப்பிடத்தக்கது
கைகடிகாரம் போன்று காட்சியளிக்கும் உடல்நிலை கண்காணிப்பு சாதனங்கள் உற்பத்தியில் ஃபிட்பிட் நிறுவனம் உலகப்புகழ் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே கூகுள் நிறுவனம் இத்தகைய சாதன விற்பனையில் அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில் இந்நிறுவனத்தை கூகுள் வாங்கியுள்ளது. அதுமட்டுமின்றி சமீபத்தில் கூகுள் இதேபோன்ற நிறுவனமான ஃபாசில் என்ற ஸ்மார்ட் வாட்ச் தயாரிக்கும் நிறுவனத்தை 282 கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்கியது என்பது தெரிந்ததே
ஆண்ட்ராய்டை அடுத்து கூகுள் தற்போது ஸ்மார்ட் வாட்ச் போன்ற சாதன உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி வருவதால் அந்த துறையில் உள்ள முன்னணி நிறுவனங்களை விலைக்கு வாங்கி போட்டி ஏற்படாத வகையில் கூகுள் செய்து வருகிறது. மேலும் கூகுள் நிறுவனம் பிட்பிட் நிறுவனத்தை வாங்கினாலும் அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் உடல்நிலை தொடர்பான தகவல்களை கூகுள் பயன்படுத்தாது என்று உறுதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது