ஜூலை 18 தான் தமிழ்நாடு தினம்: கி.வீரமணி

தமிழ்நாடு என்ற மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டம் இணைந்த இன்றைய நாளை அதாவது நவம்பர் 1-ம் தேதியை தமிழ்நாடு தினமான இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ரூபாய் 10 லட்சம் ஒதுக்கீடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இனிமேல் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1-ஆம் தேதி அன்று தமிழ்நாடு தினமாகக் கொண்டாடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது

இந்த நிலையில் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்து அதற்கான தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்றிய நாள் ஜூலை 18 என்றும் பேரறிஞர் அண்ணா அவர்களால் தீர்மானம் இயற்றப்பட்ட இந்த ஜூலை 18 ஆம் தேதி தான் தமிழ்நாடு தினமாக கொண்டாட வேண்டும் என்றும் திராவிட கட்சி பொதுச் செயலாளர் வீரமணி அவர்கள் தெரிவித்துள்ளார். ஆனால் வீரமணி அவர்களின் இந்தக் கூற்றை யாரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழ் புத்தாண்டு தினம் எது என்பதில் பெரும் குழப்பம் இருந்தது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் சித்திரை 1ஆம் தேதி தான் தமிழ்ப்புத்தாண்டு என்று அறிவிப்பதும், கருணாநிதி ஆட்சிக்கு வந்தால் தை மாதம் 1ஆம் தேதியைத்தான் தமிழ்ப்புத்தாண்டு தினமாக அறிவிப்பதும் என மாறி மாறி நிகழ்ந்தது என்பது கடந்த கால வரலாறு. ஆனால் இன்றும் சித்திரை 1ஆம் தேதியைத்தான் தமிழ்ப்புத்தாண்டாக தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இதேபோன்ற ஒரு பிரச்சனையை மீண்டும் கி.வீரமணி அவர்கள் கிளப்பியுள்ளார். அவரது முயற்சி எந்த அளவுக்கு வெற்றி பெறுகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்