மாஸாக ரீஎன்ட்ரீ கொடுத்தார் குஷ்பூ!! இப்போ எந்த சீரியலில் நடிக்கிறாங்க தெரியுமா??
தமிழ் சினிமாவில் 90களில் நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பூ. இவர் தமிழக திரைப்பட நடிகை ஆவார். இவர் ஒரு அரசியல்வாதியும் அவர். இவர் தற்போது பாரதிய ஜனதா கட்சியில் உள்ளார். 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையை தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு வருஷம் பதினாறு என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு 1990களில் திரைப்பட உலகின் முன்னணி திரைப்பட இயக்குனரான சுந்தர் சியை மணந்தார்.
தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். மேலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றி வருகிறார். தன் கணவர் சுந்தர்.சி கதாநாயகனாக நடிக்கும் படங்களை அவ்னி சினிமாஸ் என்ற நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.
அந்த வகையில் நடிகை குஷ்பூ சின்னத்திரையிலும் பல நாடகங்களில் நடித்துள்ளார். அதில் குங்குமம், கல்கி உள்ளிட்ட பல தொடர்கள் உள்ளன. இதனிடையே தேர்தல் பணிக்காக சின்னத்திரையில் இருந்து சற்று விலகி இருந்தார். தற்பொழுது தேர்தல் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒரு சீரியலில் புதிய கதாபாத்திரமாக இணைந்துள்ளார். அந்த சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கோகுலத்தில் சீதை சீரியல் தான். மேலும் இந்த சீரியலில் பொறுப்புள்ள, தைரியமான பெண்ணாக மங்கலம் டாக்டர் கதாபாத்திரத்தில் குஷ்பூ நடித்து வருகிறார். வரவிருக்கும் எபிசோடுகளில் பல திருப்பங்களை தர உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் குஷ்புவை மீண்டும் சின்னத்திரையில் பார்ப்பதற்கு ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.