அம்மா வீட்டிற்கு போனா என்ன? என் மனைவி தான? வா நான் பார்த்து கொள்கிறேன்!

0
73
What if my mother goes home and my wife donates? Come on I'll take care of it!
What if my mother goes home and my wife donates? Come on I'll take care of it!

அம்மா வீட்டிற்கு போனா என்ன? என் மனைவி தான? வா நான் பார்த்து கொள்கிறேன்!

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் போன்னரம்பட்டியை சேர்ந்த மணிவண்ணன் வாழ்ந்து வருகிறார். 28 வயதான இவர் சொந்தமாக நெல் அறுவடை இயந்திரம் வைத்து தொழில் செய்து வருகிறார்.நாமக்கல் மாவட்டத்தில் கோரையாறு பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து ஐந்து வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்த பெண்ணின் பெயர் சிந்தாமணி ஆகும்.அவருக்கு வயது 25 ஆகும். இவர்களுக்கு 4 வயதில் யோகன் என்ற மகனும் உள்ளார். ஆனால் சிந்தாமணி திருமணம் ஆன சில நாட்களிலேயே கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று அம்மா வீட்டிலேயே தங்கி விட்டார்.

அவர் கடந்த நான்கு வருடங்களாக அம்மா வீட்டிலேயே தங்கி இருந்தார். இந்நிலையில் அவருடைய தாய் மற்றும் தந்தை உடல் நிலை சரியில்லாமல் போய் ஒருவர் பின் ஒருவராக உயிர் இழந்துவிட்டனர். அதனை தொடர்ந்து சிந்தாமணியின் உறவினர்கள் உன் கணவருடன் சென்று வாழலாம் அல்லவா? என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

அதன் காரணமாக தன் கணவன் வீட்டுக்கு வந்த அவருக்கு கணவர் தன் வீட்டின் அருகிலேயே வீடு ஒன்றை ஏற்பாடு செய்து கொடுத்தார். சிந்தாமணி பிரிந்து சென்றதன் காரணமாக அவர் வேறு திருமணம் செய்து விட்டார்.

இருந்தாலும் வந்த பெண்ணை வாழ வைக்க வீடு ஏற்பாடு செய்து கொடுத்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் வந்த அந்த பெண் நேற்று நீண்ட நேரமாகியும் வெளியே வராததால், கதவை உடைத்து பார்த்த போது, அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார்.

இது குறித்து போலீசாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் காரணமாக போலீசார் அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

அந்த பெண் இறக்கும் போது என்னவெல்லாம் நினைத்து இருப்பார். ஒருவேளை மகனை கணவனிடத்தில் சேர்க்கவே வந்திருப்பாரோ? என்ற விதத்தில் நமக்கு பல கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தது. தாய், தந்தையை இழந்து கணவன் வீட்டுக்கு வந்த பெண் இப்படி செய்தது, பார்பவர்களை கவலைக்குள்ளாக்கியது.