செல்போன் பேசிக்கொண்டே மெட்ரோ தண்டவாளத்தில் விழுந்த பெண்: அதிர்ச்சி வீடியோ

0
166

செல்போன் பேசிக்கொண்டே மெட்ரோ தண்டவாளத்தில் விழுந்த பெண்: அதிர்ச்சி வீடியோ

இன்றைய காலத்தில் செல்போன் என்பது இன்றியமையாத ஒரு பொருளாக இருந்து வரும் நிலையில் இந்த செல்போனில் முழுக்க முழுக்க மூழ்கி விட்டால் அது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் என்பதை பல சம்பவங்களில் இருந்து நாம் தெரிந்து கொண்டிருக்கின்றோம்

இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டில் ஒரு பெண் செல்போன் பேசிக்கொண்டே திடீரென மெட்ரோ தண்டவாளத்தில் விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஸ்பெயின் நாட்டின் மேட்ரிட் நகரில் ஒரு பெண் மெட்ரோ ரயிலுக்காக காத்திருக்கின்றார். அப்போது அவருக்கும் ஒரு செல்போன் அழைப்பு வருகிறது. அந்த செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது எதிரே உள்ள மெட்ரோ பாதையில் ஒரு மெட்ரோ ரயில் வந்து நின்றது. உடனே அவர் செல்போனில் பேசிக்கொண்டே தான் நிற்கும் தண்டவாளத்தில் தான் அந்த ரயில் வருவதாக நினைத்து ரயிலை நோக்கி நடந்தார்.

அப்போது அவர் தவறி தண்டவாளத்தில் விழுந்தார். அந்த நேரம் பார்த்து அந்த தண்டவாளத்தில் ஒரு மெட்ரோ ரயில் வர பதட்டம் அடைந்த சக பயணிகள் உடனே அந்த பெண்ணை காப்பாற்றியுள்ளனர். அந்த பெண் சரியான நேரத்தில் காப்பாற்றப்பட்டதாகவும் அவருக்கு காயம் எதுவும் இல்லை என்றும் மேட்ரிட் மெட்ரோ ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த வீடியோ மேட்ரிட் மெட்ரோ ரயில் நிலையத்தின் டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது.

Previous articleஜூலை 18 தான் தமிழ்நாடு தினம்: கி.வீரமணி
Next articleதுணை முதல்வர் ஆகிறாரா சி.வி. சண்முகம் ???