சிவகார்த்திகேயன் யாருடைய பெயரை தன் மகனுக்கு வைத்துள்ளார் தெரியுமா?

0
242

நடிகர் சிவகார்த்திகேயன் தனது ஆண் குழந்தைக்கு குகன் தாஸ் என்று பெயர் வைத்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது திரைத்துறையைத் தொடங்கிய சிவகார்த்திகேயன் தனது திறமையாலும், விடாமுயற்சியாலும் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். இவர் கடந்த 2010ஆம் ஆண்டு தனது நெருங்கிய உறவினரான ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராதனா என்ற 7 வயது மகள் உள்ளார்

இந்நிலையில் தற்போது மீண்டும் சிவகார்த்திகேயன் ஆர்த்தி தம்பதியினருக்கு கடந்த மாதம் ஜூலை 12ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது ஆண் குழந்தைக்கு அவரது தந்தையின் பெயரை குகன் தாஸ் என்று வைத்துள்ளார்.

இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் “எங்கள் அன்பு மகனை வாழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் உங்கள் அன்போடும் ஆசையோடும் குகன் தாஸ் என பெயர் சூட்டி இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

Previous articleஇணையம் மூலம் பல பெண்களை சீரழித்த வாலிபன்! மீண்டும் ஒரு காசி!
Next articleகுளியலறையில் சிகரெட் துண்டுடன் ஆண்ட்ரியாவின் பிசாசு-2வின் வேற லெவல் ஃபர்ஸ்ட் லுக்!!