தயாநிதி மாறனை எச்சரித்த அண்ணாமலை! நடுக்கத்தில் திமுக!

0
175

தமிழக பாஜகவின் இளைஞர் அணியின் அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் மக்களுக்காக, மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக இருக்கும் கட்சி பாஜக குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக இருக்கும் ஒரு கட்சி திமுக என தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை பகிரங்கமாக தெரிவித்து இருக்கிறார்.

மதுபானங்கள் விற்பனை செய்யும் அமைச்சருக்கு மரியாதை கொடுத்து அருகில் விவசாய அமைச்சருக்கு மரியாதை மறுத்துவிட்டு தூரத்தில் வைத்திருக்கும் ஒரே அரசு திமுக அரசுதான். தமிழக மக்களுக்காக உண்மையாக உழைத்து வரும் எங்களுடைய கட்சியை பற்றி இன்னொரு முறை தயாநிதி மாறன் கொச்சைப்படுத்தும் விதமாக உரையாற்றினால் உங்களைப் பற்றி அனைத்து விஷயங்களையும் வீதிக்கு கொண்டு வர நேரிடும் என்று தெரிவித்திருக்கிறார். கர்நாடக மாநிலத்தில் என்னென்ன பித்தலாட்டங்களை தயாநிதி மாறன் குடும்பம் செய்து கொண்டிருக்கிறது என்பது தொடர்பான விவரங்களை வெளியிடுவோம் என்று தெரிவித்திருக்கிறார்.

தமிழக மக்களுக்கு உண்மையாக உழைத்து வரும் எங்களுடைய கட்சியை பற்றி மறுமுறை தயாநிதி மாறன் இதுபோன்று கொச்சைப் படுத்தினால் அவரைப் பற்றிய அனைத்து விஷயங்களையும் போட்டு உடைக்க நேரிடும் என்று தெரிவித்து இருக்கிறார்.சாராய விற்பனையை உயர்த்துவதற்காக மாதம்தோறும் ரிவ்யூ மீட்டிங் நடத்தி வரும் திமுக அரசு மோடி அரசின் விவசாய திட்டங்கள் தமிழக விவசாயிகளுக்கு முறையாக சென்று சேர்ந்து இருக்கிறதா என்பதை அறிய ஒரு ரிவியூ மீட்டிங் கூட நடத்தியது கிடையாது என்று தமிழக பாஜக தலைமை தெரிவித்திருக்கிறது.

Previous articleஊரடங்கை கடுமையாக்கும் அரசு! வங்கி சந்தைகளுக்கு செல்ல இது கட்டாயம்!
Next articleதமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here