தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு!

0
190

தமிழ்நாட்டில் இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்ற உதகை, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்கள் கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட இடங்களில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.நாளையும், நாளை மறுநாளும், உதகை, கோவை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

வரும் 9ஆம் தேதி மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்ற உதகை, கோவை, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதோடு உள் மாவட்டங்களில் இடியுடன் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

சென்னையை பொருத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை ஆக 28 டிகிரி செல்சியஸ் இருக்கும் எனவும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

Previous articleதயாநிதி மாறனை எச்சரித்த அண்ணாமலை! நடுக்கத்தில் திமுக!
Next articleஅடிச்சான் பாரு அப்பாயின்மெண்ட் ஆர்டர்!! குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை பறிக்கப்படும்!! ஸ்டாலினுக்கு குவியும் பாராட்டு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here