கடனில் மூழ்கிய வோடபோன் மற்றும் ஐடியா! விரைவில் மூடப்படும் நிலை!
நம் மக்கள் அனைவரும் கடந்த சில ஆண்டுகளாக இன்டர்நெட் ஸ்பீட் தேடியே செல்கின்றனர்.தற்போதைய டெலிகாம் சேவையில் பல போட்டிகள் நடந்து வருகிறது.இதில் சந்தையில் மற்ற நெட்வர்க்குடன் போட்டி போட முடியாமல் ஐடியா வோடபோனுடன் கை கோர்த்தது.அதுமட்டுமின்றி ஏர்டெல் மற்றும் ஜியோ இடையே இன்றளவும் போட்டி நடந்து வருகிறது.மக்கள் பெரும்பாலானோர் ஏர்டெல் மற்றும் ஜியோ நெட்வொர்க் சிம் கார்டையே பயன்படுத்துகின்றனர்.
இவர்களுடன் போட்டி போட முடியாமல் வோடாபோன் மற்றும் ஐடியா நெட்வர்க் அதிகளவு கடனுக்கு தள்ளப்பட்டுள்ளது.தற்பொழுது ஐடியா மற்றும் வோடாபோன் ஆகிய நெட்வர்க் மூடும் நிலையில் உள்ளது.ஏனென்றால் இந்த நிறுவனத்திற்கு 1.8 லட்சம் கோடி கடன் இருப்பதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும் இக்கடனை அடைக்க அவர்கள் கையில் போதுமான வருமானம் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.கடனை அடைக்க முடியாததால் தற்பொழுது அந்த நெட்வர்க் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
அவ்வாறு அந்நிறுவனம் மூடப்பட்டால் அந்த நெட்வர்க் உபயோகிக்கும் 27 கோடி மக்களின் நிலை கவலைக்கிடம் தான்.அதுமட்டுமின்றி அங்கு வேலை செய்யும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வேலையும் பறிபோகும் நிலை உண்டாகும்.இந்த நெட்வர்க்கில் 26% சதவீத பங்குடன் குமாரமங்கல பிர்லாவும் 45% சதவீதத்துடன் பிரட்டன் நிறுவனமும் கைகோர்த்துள்ளனர்.அதுமட்டுமின்றி வாங்கிய கடனை கட்ட முடியா காரணத்தினால் 26% உள்ள உரிமையாளர் தனது பங்குகளை இலவசமாக அரசாங்கத்திற்கு தருவதாக கூறியுள்ளார்.
மேலும் இந்நிறுவனத்தை அரசே தொடர்ந்து நடத்துமாறும் கூறியுள்ளார்.அதேபோல 45% வைத்துள்ள பிரிட்டன் உரிமையாளரும் தனது பங்குகளை இலவசமாக தருவதாக வங்கிகளுக்கு தெரிவித்துள்ளார்.அந்தவகையில் வோடாபோன் மற்றும் ஐடியா நிறுவனம் 350 கோடி மட்டுமே தனது கையிருப்பில் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.மேலும் அரசிடம் 1.8 லட்சம் கடன் வாங்கி அதை அடைக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.அதுமட்டுமின்றி வங்கிகளிடம் இருந்து 23000 கோடி கடன் பெற்று அதற்கான வட்டியையோ அல்லது அசலையோ இன்றளவும் அவர்களால் செலுத்த முடியவில்லை.
மேற்கொண்டு அவர்களுக்கு நட்டம் உண்டாவதால் இந்த நெட்வர்க் எடுத்து நடத்த முடியாமல் இதனை அரசாங்கம் எடுத்து நடத்த கூறி வலியுறுத்தி வருகின்றனர்.அதேபோல 6 ரூபாய்க்கு பங்குசந்தையில் இதனுடன் பங்கு குறைந்து விற்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.