கவலை வேண்டாம் இந்தியாவின் மகள்களே! இந்திய ஹாக்கி மகளிர் அணிக்கு புகழாரம் சூட்டிய பிரதமர் நரேந்திர மோடி!

0
75

ஒலிம்பிக் மகளிர் ஹாக்கிப் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் ௧-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது இந்திய மகளிர் அணி. இந்த நிலையில், ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லுமா என்று எதிர்பார்த்து காத்திருந்த இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி அடையும் விதத்தில் அரையிறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவிடம் ஒன்றுக்கு 2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது.

இந்த சூழ்நிலையில், இன்றைய தினம் மூன்றாவது இடத்திற்கான வெண்கலப்பதக்கம் வெல்வதற்கான போட்டியில் இந்திய அணி பிரிட்டன் அணியுடன் நேருக்கு நேர் சந்தித்தது. இதில் இந்திய அணி போராடி தோல்வியை சந்தித்தது. பல தோல்விகளைத் தாண்டி இவ்வளவு தூரம் போராடியும் பதக்கம் வெல்ல இயலாத ஒரு நிலை ஏற்பட்டதால் இந்திய அணியின் வீராங்கனைகள் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில் இந்திய ஹாக்கி மகளிர் அணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தன்னுடைய பாராட்டுக்களை தெரிவித்து இருக்கின்றார். அதில் இந்திய மகளிர் ஹாக்கி அணி களத்தில் மிகச் சிறப்பாக விளையாடியது. அதோடு ஒவ்வொரு இந்தியரின் மனதையும் வென்றெடுத்து இருக்கிறது. உங்கள் அனைவரையும் நினைத்து நாங்கள் பெருமை கொள்கின்றோம் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்திருக்கின்றார்.

அதேபோல பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட இருக்கின்ற ஒரு பாராட்டு செய்தியில் டோக்கியோ ஒலிம்பிக்கில் எங்களுடைய பெண்கள் ஹாக்கி அணி மிக சிறப்பான செயல்பாட்டை நாங்கள் எப்போதும் நினைவில் வைத்திருப்போம். அவர்கள் தங்களுடைய திறமையை முழுவதுமாக பயன்படுத்தி தங்களால் முடிந்ததை செய்தார்கள். அணியின் ஒவ்வொரு உறுப்பினரும் குறிப்பிடத்தக்க தைரியம் மற்றும் திறமை அதோடு நெகிழ்ச்சியுடன் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். இந்த சிறந்த அணியால் இந்தியா பெருமைப்படுகிறது என்று தெரிவித்திருக்கிறார்.

மகளிர் ஹாக்கி அணியில் நாங்கள் ஒரு பதக்கத்தை இழந்து இருக்கின்றோம். ஆனால் இந்திய ஆணி புதிய இந்தியாவின் மனநிலையைப் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றது. நாங்கள் மிக சிறந்த மற்றும் புதிய எல்லைகளை அளவிட்டுக் கொண்டிருக்கின்றோம் மிக முக்கியமாக டோக்கியோ ஒலிம்பிக்கில் பெற்ற வெற்றியை இந்தியாவின் இளம் மகள்களுக்கு ஹாக்கியை எடுத்து அதில் சிறந்து விளங்க ஊக்குவிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.