மூன்றாவது அலை இந்த மாவட்டங்களை பாதிக்கும்!ஆய்வாளர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
கொரோனா தொற்றானது கடந்த இரு வருட காலமாக முதல் மற்றும் இரண்டாம் அலை என மக்களை பாதித்து வருகிறது.அதனை அடுத்து தற்போது உருவாகி வரும் மூன்றாவது அலை தான் அதிக தாக்கத்தை கொண்டிருக்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.அந்த வகையில் கொரோனா தரவு ஆய்வாளர் விஜயானந்த் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியது, கொரோனா பரவலை மூன்று வரிசையில் பட்டியலிடுவோம்.அதில் முதலாவது தொற்று பாதிப்பின் உறுதி, இரண்டாவது பாதிக்கப்பட்டவர்களின் நிலை,மூன்றாவது புதிய தொற்றின் அதிகரிப்பு ஆகும்.தற்பொழுது சென்னையை பொறுத்தவரை முதலாவதாக உள்ள தொற்று பாதிப்பு உறுதியின் மதிப்பு .8% மட்டுமே உள்ளது.
அதிக அளவு உயரவில்லை. இரண்டாவது பட்டியலான தொற்று பாதித்தவர்களுக்கு மீண்டும் தொற்றின் பாதிப்பு உண்டாகும் மதிப்பு தமிழ்நாட்டில் சதவீதம் -4 ஆகவே உள்ளது.தற்பொழுது தான் சற்று அதிகரிக்கிறதே தவிர இது முழுமையான மூன்றாவது அலையின் தாக்கம் என்று கூற முடியாது.மேலும் அவர் கூறியது, சீரோ சர்வரின் மூலம் 60% தமிழ்நாட்டிற்கு ஆன்டிபாடிக் உள்ளதாக கூறியுள்ளனர்.
ஆனால் இது மாவட்ட வாரியாக பார்க்கும் பொழுது சென்னை, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் 80 சதவீதத்திற்கும் மேல் ஆன்ட்டிபாட்டிக் காணப்படுகிறது.அதுவே மேற்கு பகுதியில் உள்ள சேலம்,ஈரோடு,கோயம்புத்தூர்,நாமக்கல் போன்ற பகுதிகளில் குறைவாகவே ஆன்டிபாடிக் உள்ளது.அதனால் அங்கு உள்ள மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வழி செய்ய வேண்டும்.
அதேபோல இந்த மாவட்டங்களில் சிறிய அளவில் மூன்றாவது அலையின் தாக்கம் காணப்படும் வாய்ப்புகள் உள்ளது. அதேபோல மூன்றாவது அலை குழந்தைகளை பாதிக்கும் எனக் கூறுவது பொய்யான தகவல் என்பதுபோல் கூறினார். தற்பொழுது கேரளாவின் ஆன்ட்டி பாடிக் குறைந்து காணப்படுவதால் தொற்றின் தாக்கம் சிறிதளவு அதிகரிக்க தொடங்கியுள்ளது இன்று இறுதியில் கூறினார்.