முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி கைதா? உச்சக்கட்ட பரபரப்பில் வழக்கு பதிவு!
அதிமுக ஆட்சியின்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர்தான் எஸ்.பி வேலுமணி. இவர் பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளனர்.அந்த வகையில் அரசு ஒப்பந்த பணி வாங்கி தருவதாக கூறி ரூ 1.5 கோடி எஸ்.பி வேலுமணி தன்னிடம் பணம் வாங்கி மோசடி செய்ததாக திருவேங்கடம் என்பவர் புகார் அளித்தார்.அதனை அடுத்து கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் சேர்ந்த ரகுநாத் என்பவரும் லஞ்ச ஒழிப்பு காவல்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அந்த வகையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று அதிகாலை முதலே எஸ்.பி வேலுமணி வீட்டில் சோதனை நடத்த தொடங்கினர்.இந்த சோதனையானது எஸ்.பி வேலுமணி வீட்டில் மட்டுமல்லாமல் அவருக்கு நெருக்கமான சிலரது வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.எஸ்.பி வேலுமணி வீட்டில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.இந்த சோதனை காரணமாக முன்னாள் அமைச்சர் அதிமுக எஸ்.பி வேலுமணி வீட்டின் முன் தொண்டர்கள் குவிய தொடங்கினர்.இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது.
அதிமுக ஆட்சியில் இருந்தபோது 2014ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை செயல்பட்டு வந்த பல்வேறு திட்டப் பணிகளில் எஸ் பி வேலுமணி முறைகேடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.அந்த முறைக்கேடுகள் அடிப்படையில் எஸ்.பி வேலுமணி உட்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்து 17 நபர்களான செந்தில் அண்ட் கோ பங்குதாரர் அன்பரசன்,கேசிபி என்ஜினியர் பிரைவேட் லிமிடெட்,கேசிபி இன்ஜினியர் இயக்குனர் சந்திரபிரகாஷ்,இயக்குனர் சந்திரசேகர்,எஸ்பி பில்டர்ஸ் ஆர்.முருகேசன்,ஜேசு ராபர்ட் ராஜா,பி.ஆர் கன்ஸ்டிரக்ஷன் ராஜன் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சி ஒப்பந்தத்தில் மட்டும் ரூ 464 கோடி எஸ்.பி வேலுமணி ஊழல் செய்ததாக இந்த சோதனையின் மூலம் தெரிவித்துள்ளனர்.