திருமண ஆசை காட்டி நடிகர் ஆர்யா மோசடி! பெண் அளித்த புகாரின் பேரில் விசாரணை
நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் தன்னுடன் நடிக்கும் சக நடிகைகளுடன் நெருங்கி பழகுவது அனைவரும் அறிந்ததே.வசீகரமாக பேசக்கூடியவரும் உடலமைப்பை கட்டுகோப்பாக வைத்திருப்பதும் இவரின் பண்புகள்.சில நாட்கள் முன்பு ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை திரைப்படம் OTT தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இதனிடையே நடிகர் ஆர்யா மீது ஜெர்மனி நாட்டை சேர்ந்த விட்ஜா என்ற பெண் ஒருவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியும்,இதற்காக தன்னிடம் 71 லட்சம் பணம் பெற்றும் ஏமாற்றி விட்டதாக சிபிசிஐடியிடம் புகார் ஒன்றை ஆன்லைன் மூலமாக கொடுத்துள்ளார்.இந்த புகாரில் தன்னிடம் ஆன்லைன் மூலமாக நடிகர் ஆர்யா அவ்வபோது பணம் பெற்றதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.மேலும் நீதிமன்றத்திடமும் அவர் புகார் அளித்துள்ளார்.
இவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நீதிபதிகள் மத்திய குற்ற பிரிவு போலீசாரிடம் புகார் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.இதனால் போலீசார் நடிகர் ஆர்யாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.அதனை தொடர்ந்து நடிகர் ஆர்யா சென்னை வேப்பேரியில் பெருநகர காவல் ஆணையரகத்தில் மத்திய குற்ற பிரிவு போலீசார் முன்பு இன்று ஆஜரானார்.
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஆய்வாளர் கீதா விசாரணையை நடத்தினார்.அதன்பின்னர் விசாரணை முடிந்து வெளியே வந்த நடிகர் ஆர்யாவிடம் செய்தியாளர்கள் பேச முயற்சித்தனர்.ஆனால் அவர் செய்தியாளர்களுடன் பேசுவதை புறக்கணித்துவிட்டார்.மேலும் அந்த இடத்தை விட்டு உடனே கிளம்பி விட்டார்.
இதுவரையில் நடிகர் ஆர்யா மீது எந்த குற்றச்சாட்டையும் யாரும் வைத்ததில்லை.இரண்டு வருடங்களுக்கு முன்தான் அவருக்கு நடிகை சாயீஷா உடன் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் திருமண ஆசை காட்டி மோசடி செய்ததாக எழுந்துள்ள இந்த குற்றசாட்டால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்