கொரோனா தடுப்பூசியை மாற்றி செலுத்தினால் அதிக பாதுகாப்பா? மருந்து தர கட்டுபாட்டு ஆணையம் வெளியிட்ட உத்தரவு

0
161
கொரோனா தடுப்பூசியை மாற்றி செலுத்தினால் அதிக பாதுகாப்பா? மருந்து தர கட்டுபாட்டு ஆணையம் வெளியிட்ட உத்தரவு
கொரோனா பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ள சமூக இடைவெளியை கடைபிடிப்பதுடன் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும் என உலக நாடுகள் அறிவுறுத்தி வருகின்றன.இதனையடுத்து இந்தியாவிலும் தடுப்பூசி செலுத்தும் பணியானது தீவிரமாக செயல்பட்டு வருகிறது.ஆரம்பத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு சில பக்கவிளைவுகள் ஏற்பட்டதால் பொதுமக்கள் அனைவரும் அச்சம் கொண்டு தடுப்பூசியை போட ஆர்வம் காட்டவில்லை.
இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பானது தீவிரமடைந்த நிலையில் தங்களை பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி ஒன்றே வழி என அனைவரும் தடுப்பூசியை போட்டுக் கொள்ள ஆரம்பித்தனர்.இதனையடுத்து தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழலும் ஏற்பட்டது.மத்திய அரசும் நாட்டு மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்தவகையில் இந்தியாவில் கொரோனாவிற்கு எதிராக கோவிஷீல்டு, கோவேக்சின் என
இரண்டு வகையான தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது.இந்த இரண்டு தடுப்பூசிகளுமே இரண்டு தவணைகளாகவே வழங்கப்பட்டு வருகிறது.அதாவது முதல் டோசை போட்டுக்கொண்ட பிறகு ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்கு பிறகு தான் அடுத்த டோசை போட்டுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதுவும் முதல் டோஸில் எந்த வகை தடுப்பூசியை போட்டுக் கொண்டார்களோ அதே வகையை தான் அடுத்த டோசிலும் போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.முதல் தவணையில் ஒரு வகை தடுப்பூசியையும், 2-வது தவணையில் மற்றொரு வகை தடுப்பூசியையும்  பரிந்துரைப்பதில்லை. ஆனால் இரண்டு வகை தடுப்பூசிகளை மாற்றி செலுத்தலாமா என்பது குறித்த ஆய்வுகள் வெளிநாடுகளில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் முதல் தவணையிலும், இரண்டாவது தவணையிலும் வெவ்வேறு தடுப்பூசிகளை செலுத்துவது பாதுகாப்பானது என தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக கோவேக்சின், கோவிஷீல்டு என இந்த இரண்டு வகையான தடுப்பூசிகளை மாற்றி செலுத்துகிறபோது அது பாதுகாப்பானது என்றும், மேலும் இது கொரோனா வைரசுக்கு எதிராக சிறப்பான நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 வகையான தடுப்பூசிகளை கலந்து செலுத்துவதற்கான ஆய்வுக்கு இந்திய மருந்து தர கட்டுப்பாடு ஆணையமானது  இன்று அனுமதி அளித்துள்ளது. முன்னதாக இந்த இரு வகையான தடுப்பூசிகளை கலந்து பயன்படுத்தினால் கொரோனாவிற்கு எதிராக நல்ல பாதுகாப்பை தரும் என ஐ.சி.எம்.ஆர். வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் இதற்கு அனுமதி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Previous articleசெப்டம்பர் 1-ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்குகிறது பள்ளிகள்! அமைச்சர் அதிரடி பேட்டி!
Next articleஇந்த விளையாட்டில் ஆண்டுக்கு இவ்வளவு வருமானமா? அந்த வீரர் யார் தெரியுமா?