அடுத்த இந்த எம்.எல்.ஏக்கள் மீது வழக்கு பதிவு! உச்ச கட்ட பரபரப்பில் அதிமுக!
திமுக ஆட்சி அமைத்தால் கடந்த ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை வெளிக் கொண்டுவந்து தண்டிக்கப்படும் எனக் கூறினர்.அதேபோல திமுக ஆட்சி அமைத்து நான்கு மாதங்கள் நிறைவடையும் முன்பே ஊழல் செய்தவர்களை வெளிக்கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளனர்.அதிமுகவின் முதல் பொறியாக சட்டமன்ற உறுப்பினர் களிடமிருந்து ஆரம்பித்துள்ளனர்.அந்த வகையில் முதலாவதாக கடந்த ஆட்சியின் முன்னால் போக்குவரத்து துறை விஜயபாஸ்கர் மீது ஊழல் புகார் வந்தது.
புகார் வந்ததையடுத்து விஜயபாஸ்கர் வீட்டில் சோதனையிட்டு கணக்கில் வராத ஆவணங்களை கைப்பற்றினர்.அதனையடுத்து தற்பொழுது முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.இவர் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் முதலில் புகார் அளித்துள்ளனர்.அத்தோடு சென்னை மற்றும் கோயம்புத்தூர் சம்பந்தப்பட்ட 816 கோடி ஒப்பந்தங்களையும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு கொடுத்ததாகவும் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் பேரில் இரு தினங்களுக்கு முன் ஏழு மணி நேரத்திற்கும் மேலாக எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வந்தனர்.சோதனை நடத்தியதில் கணக்கில் வராத ஆவணங்கள் கைப்பற்றியதாகவும் கூறினர்.அதுமட்டுமின்றி இவருக்கு சம்பந்தப்பட்ட 17 பேர் மீதும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது.மேலும் எஸ் பி வேலுமணி அமைச்சர்கள் தங்கும் விடுதியில் டீ பிளாக் பத்தாம் வீட்டில் தங்கியிருந்தார்.எஸ் பி வேலுமணி யை அந்த வீட்டிலேயே வைத்து லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இவரை வீட்டில் வைத்து சோதனை நடத்துவது அறிந்த எம்.எல் ஏக்கள் மற்றும் எம்.பிக்கள், தொண்டர்கள் என அனைவரும் அந்த வீட்டின் முன் குவிய தொடங்கினர்.மேலும் நாங்களும் உள்ளே செல்ல வேண்டும் என்று அங்குள்ள போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அவ்வாறு ஈடுபட்டதில் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் ,பெஞ்சமின் மேலும் மாவட்ட செயலாளரான ராஜேஷ் ,ஆதிராஜாராம் ,வெங்கடேஷ் பாபு ,பாலகங்கா ,விருகை ,ரவி ஆகியோர் குறிப்பிடத்தக்கது.இவர்களின் வாக்குவாதத்தில் இறுதியில் அமைச்சர்களான சி.வி சண்முகம் மற்றும் பெஞ்சமின் ஆகியோர் மட்டும் விடுதிக்குள் செல்ல போலீசார் அனுமதித்தனர்.மீதமுள்ளவர்களை அனுமதிக்க மறுத்துவிட்டனர்.
மீதமுள்ளவர்களை அங்கிருந்து செல்லும்படி போலீசார் கேட்டுக்கொண்டனர்.ஆனால் அவர்கள் விடுதியிலிருந்து செல்லாமல் போலீசாருடன் மேலும் வாக்குவாதத்தை தொடர்ந்தனர்.அப்போது அமைச்சர்கள், எம்பிகள் ஆகியோர் போலீசார் அங்கு வைத்துள்ள தடுப்பு வாயிலை உடைத்துக் கொண்டும் விடுதிக்குள் செல்வதற்கு முயற்சி செய்தனர்.இதனால் போலீசாருக்கும் அதிமுக உறுப்பினர்களுக்கும் இடையே சிறு மோதல் ஏற்பட்டது.அதனையடுத்து தொண்டர்கள் அனைவரும் கோஷங்களை எழுப்பி போராட்டத்தை ஆரம்பித்து விட்டனர்.
அதனையடுத்து போலீஸ் கமிஷ்னர் தீபக் தாமோர் மற்றும் துணை கமிஷ்னர் ஆகியோர் சென்று போராட்டத்தை கலைக்க முயன்றனர்.மேலும் எஸ்.பி வேலுமணியிடம் இறுதி விசாரணை நடந்து கொண்டிருக்கும் பொழுது போலீசாரையும் மீறி உள்ளே செல்ல முயன்றவர்கள் மீது வழக்குப்பதிவு போடப்பட்டது.அந்த வகையில் திருவல்லிக்கேணி போலீசார் அதிமுக மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம், முன்னாள் எம்பி வெங்கடேஷ் பாபு, உள்ளிட்ட 10 பேர் மீது ,போலீசார் கூறியதை மதிக்காமல் போன்ற மூன்று பிரிவுகளின் கீழ் அவர்கள் மேல் வழக்கு பதிவு செய்தனர்.
அதுமட்டுமின்றி ஊரடங்கு காலத்தில் கூட்டம் கூடி தொண்டர்களை கோஷமிட வைத்ததற்காகவும் அதிமுக எம்எல்ஏக்கள் அம்மன் அர்ஜுனன் ,ஏ.கே செல்வராஜ் ,பி.ஆர் அருண்குமார் ,தாமோதரன் ,பொள்ளாச்சி ஜெயராமன் ,மகேந்திரன் என 542 பேர் மீது குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இவர்கள் மீதும் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.கரோனா கால கட்டத்தில் சட்டவிரோதமாக மக்களை திரட்டியது,பொதுமக்களுக்கு போக்குவரத்து இடையூறு,கொரோனா தொற்று நோய் பரவல் தடுப்பு என வழக்குகள் போடப்பட்டுள்ளது. மீதமுள்ள எம்எல்ஏக்கள் மீதும் வழக்கு பதிவு போட்டதால் கட்சித் தலைமை உச்ச கட்ட பரபரப்பில் காணப்படுகிறது.