ஒலிம்பிக்கில் வெங்கலப்பதக்கம் வென்ற வீரருக்கு 2கோடி ரூபாய் பரிசு அறிவித்த கேரள அரசு!

0
88

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்த வருடம் இந்தியா பெரிய அளவில் சோபிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். பெண்கள் பேட்மின்டன் போட்டியில் பிவி சிந்து வெங்கல பதக்கம் வென்றார். அதேபோல இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வெண்கலப்பதக்கம் வென்றது. ஆனால் இந்திய பெண்கள் ஹாக்கி அணி கடைசி வரையில் போராடி தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக அந்த அணி சார்ந்த பெண்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானார்கள்.

அத்துடன் தோல்வியடைந்த பின்னர் அவர்கள் ஆடுகளத்திலேயே மனமுடைந்து கண்ணீர் விட்டது அனைவரையும் கலங்க வைத்தது. அத்துடன் இதனைக் கேள்விப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக பெண்கள் ஹாக்கி அணியில் இருப்பவர்களுக்கு தொலைபேசியின் மூலமாக ஆறுதல் தெரிவித்தார். அப்போதும் கூட அவர்கள் அழுது கொண்டேதான் பிரதமர் உரையாடியதை கேட்டுக் கொண்டிருந்தார்கள்

இந்த நிலையில், இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா மட்டும்தான் தங்கம் வென்றார்.இந்த சூழ்நிலையில், கேரள அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது அந்த கூட்டத்தில் ஒலிம்பிக்கில் பங்கேற்றவர்களுக்கு பரிசளிப்பது தொடர்பாக பல்வேறு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

கேரள கல்வித் துறையில் துணை இயக்குனராக இருக்கும் ஸ்ரீ ராஜேஷுக்கு இணை இயக்குனராக பதவி உயர்வு வழங்க முடிவு செய்யப்பட்டது அவருக்கு மேலும் இரண்டு கோடி ரூபாய் பரிசு தொகை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதை தவிர ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று கேரள வீரர்களுக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் வழங்குவதற்கும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது