முன்னாள் அமைச்சருக்கு செக் வைத்த லஞ்ச ஒழிப்புத்துறை!

0
151

கோயம்புத்தூர் மற்றும் சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில் ரூபாய் 811 கோடி ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி உட்பட ஏழு பேர் மீதும், 10 நிறுவனங்கள் மீதும், ஊழல் மோசடி உட்பட 7 பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தார்கள்.

இதனை அடுத்து நேற்று முன்தினம் வேலுமணியின் வீடு அவருடைய சகோதரர்கள் மற்றும் மிக நெருங்கிய உறவினர்கள், மிக நெருங்கிய நண்பர்கள், உள்ளிட்டோரின் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. ஒரே சமயத்தில் 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடைபெற்றது. இதில் முக்கிய ஆவணங்கள் மற்றும் 13 லட்சம் ரொக்கம் கைப்பற்ற பட்டிருக்கிறது.

வேலுமணிக்கு மிக நெருங்கிய நண்பராக இருந்த சந்திர பிரகாசுக்கு சொந்தமான கேசிபி இன்ஜினியர் நிறுவனம் மதுக்கரை அடுத்த பால்த்துறையில் இருக்கின்ற வி.எஸ்.ஐ.எம்.சான்ட் குவாரியில் நேற்றைய தினம் இரண்டாவது தினமாக சோதனை நடந்தது. இந்த சூழ்நிலையில், இன்று முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வங்கிக் கணக்கு மற்றும் வங்கிகளை லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் முடக்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

Previous articleமுன்கூட்டியே முடித்து வைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டத்தொடர்! போராட்டத்தில் குதித்த எதிர்க்கட்சிகள்!
Next articleநாளை தாக்கல் செய்யப்படுகிறது திமுக அரசின் முதல் பட்ஜெட்!