நாளை தாக்கல் செய்யப்படுகிறது திமுக அரசின் முதல் பட்ஜெட்!

0
71

தமிழ்நாட்டின் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக 125 தொகுதிகளில் வெற்றி பெற்று அசுர பலத்துடன் ஆட்சியில் அமர்ந்தது முதலமைச்சராக அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் சென்ற மே மாதம் 7ஆம் தேதி பதவியேற்றார்.அதன் பின்னர் ஜூன் மாதம் 21ஆம் தேதி சட்டசபையின் முதல் கூட்டம் நடைபெற்றது ஆண்ட்ராய்டு என சட்டசபை கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சட்டசபை உறுப்பினர்கள் பேசினார்கள். இந்த கூட்டம் மூன்று தினங்கள் நடந்தது. கடைசி நாளான அன்று முதலமைச்சர் ஸ்டாலின் விரிவாக பதில் அளித்து உரையாற்றினார்.

அதன் பின்னர் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் துறை ரீதியாக ஆய்வு செய்து இருக்கின்றார். அனைத்து துறைகளின் ஆய்வு கூட்டம் முடிவடைந்த பின்னர் கடந்த 4ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் நடந்தது.இந்தக் கூட்டத்தில் 13-ஆம் தேதி அதாவது நாளைய தினம் சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்வது தொடர்பான முடிவு மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் சட்டசபையில் 13ஆம் தேதி காலை 10 மணி அளவில் கூடுவதாக சட்டசபை செயலாளர் சீனிவாசன் அறிவித்தார்.

அதன் அடிப்படையில் தமிழக சட்டசபை கூட்டம் நாளை காலை 10 மணி அளவில் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கின்றார். நாளை மறுநாள் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய இருக்கின்றார் என்று சொல்லப்படுகிறது.நாளைய தினம் பட்ஜெட் உரையுடன் ஆரம்பமாகும் சட்டசபை கூட்டம் அடுத்த மாதம் 21ஆம் தேதி வரையில் ஒட்டுமொத்தமாக 29 தினங்கள் நடைபெறும் என்று சபாநாயகர் தெரிவித்திருக்கிறார்.

திமுக ஆட்சி பொறுப்பேற்று முதன்முதலாக தாக்கல் செய்யப்படும் இந்த பட்ஜெட் காகிதம் இல்லாத பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படும் என்றும், சபாநாயகர் அறிவித்தார். இதற்காக சட்டசபை உறுப்பினர்களின் இருக்கை முன்பு கம்ப்யூட்டர் வைக்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு கையடக்க டேப் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

திமுக ஆட்சி பொறுப்பேற்று அதுவும் ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக முதன் முறையாக பதவி ஏற்று இருக்கும் நிலையில், தற்போது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அந்த பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகள் வெளியாகும் வரி விதிப்பு அதிகமாக இருக்குமா? சலுகைகள் எதுவும் அறிவிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

சட்டசபை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் பல பிரச்சினைகளை முன்வைக்க இருக்கிறது. திமுகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவித்த வாக்குறுதிகளில் இன்னும் என்னென்ன வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருக்கிறது என்பதை பட்டியலிட்டு எதிர்க்கட்சிகள் பிரச்சனைகளை தொடங்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் எம் ஆர் விஜயபாஸ்கர், வேலுமணி உள்ளிட்டோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்திய சூழ்நிலையில், அது தொடர்பாகவும் சட்டசபையில் விவாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த கூட்டத் தொடரில் பல சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.