கிராம மக்களுக்கு வந்த ஆத்திரம்! 5 வாகனங்கள் தீக்கிரை! பதட்டமான சூழ்நிலை!

0
268
Anger at the villagers! 5 vehicles on fire! Tense situation!
Anger at the villagers! 5 vehicles on fire! Tense situation!

கிராம மக்களுக்கு வந்த ஆத்திரம்! 5 வாகனங்கள் தீக்கிரை! பதட்டமான சூழ்நிலை!

நெய்வேலி அருகே விபத்தில் என்எல்சி தொழிலாளி ஒருவர் பலியாகி விட்டார். அதன் காரணமாக ஆத்திரமடைந்த அந்த பகுதி கிராம மக்கள் வாகனங்களை அடித்து நொறுக்கி 4 லாரிகளுக்கு தீ வைத்து கொளுத்தியுள்ளனர். அங்கு மிகவும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே  கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகே உள்ள மேலகுப்பம் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி மகன் கோவிந்தன். 45 வயதான இவர் ஒரு ஒப்பந்த தொழிலாளி.

இவர் விருத்தாசலம் அருகே உள்ள பூதாமூரில் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டு விட்டு திரும்பிக்கொண்டிருந்தபோது, அந்த வழியாக நிலக்கரி சாம்பல் ஏற்றி வந்த லாரி மோதியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்து ஆத்திரமடைந்த கிராம மக்கள், அவ்வழியாக வந்த, நிலக்கரி சாம்பல் ஏற்றிக்கொண்டு வந்த 4 லாரிகள் மற்றும் ஒரு மண் வெட்டும் இயந்திரத்தை வழிமறித்து, 5 வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தியுள்ளனர்.

அதன் காரணமாக டிரைவர்கள் கீழே குதித்து தப்பி ஓடிவிட்டதால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. ஆனாலும் ஆத்திரம் அடங்காத கிராம மக்கள் அவ்வழியாக வந்த 18 ம் மேற்பட்ட வாகனங்களை வழிமறித்து, கண்மூடித்தனமாக தாக்கியும் உள்ளனர். மேலும் உருட்டுக் கட்டையால் அடித்து நொறுக்கியுள்ளனர். இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனாலும் அந்த பகுதியில் பதற்றம் தொடர்ந்து நிலவுவதன் காரணமாக 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

Previous articleஅரசு ஊழியர்களுக்கு பெரிய ஜாக்பாட்! போனஸாக ரூ.311 கோடி ஒதுக்கல்!
Next articleஇந்திய சினிமாவின் உச்ச சாதனை! தமிழ் நடிகருக்கு கிடைத்த பெருமை!