இந்திய சினிமாவின் உச்ச சாதனை! தமிழ் நடிகருக்கு கிடைத்த பெருமை!

0
103
Record of tamil actor in indian cinema
Record of tamil actor in indian cinema

 இந்திய சினிமாவின் உச்ச சாதனை! தமிழ் நடிகருக்கு கிடைத்த பெருமை!

இந்திய சினிமாவின் பிரபலமான நடிகர் கமல்ஹாசன்.இவர் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்து இந்திய சினிமா ரசிகர்கள் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.இவரின் கலைப் பயணத்தில் இன்று முக்கியமான நாள்.இன்றோடு அவர் சினிமாவிற்கு வந்து 62 ஆண்டுகள் நிறைவடைகிறது.இவரின் இந்த சாதனை இந்திய சினிமாவில் எந்த பிரபலமும் செய்திராத ஒன்று.

இவரின் திரைத்துறை பயணமானது 1960ம் ஆண்டில் தமிழில் வெளிவந்த களத்தூர் கண்ணம்மா எனும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக ஆரம்பித்தது.தன்னுடைய முதல் படத்திலேயே இவர் ஜனாதிபதி விருது பெற்றார்.இவர் ஆறு திரைப்படங்களில் குழந்தை வேடங்களில் நடித்துள்ளார்.சிறு வயதில் இருந்தே தன் திறமையான நடிப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர்.அதன் பின்னர் துணை நடன ஆசிரியராகவும் சில திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.

1973ம் ஆண்டில் கே.பாலச்சந்தர் அவர்களின் இயக்கத்தில் அரங்கேற்றம் திரைப்படத்தில் முதன் முதலாக துணை நடிகராக அறிமுகம் ஆனார்.அதன் பின்னர் கன்னியாகுமரி என்ற மலையாள திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார்.ஆரம்பம் முதலே திறமையான இயக்குனர்களுடன் பணிபுரிந்தார்.இவரின் கதாபாத்திரமும் நன்றாக பேசப்பட்டது.அடுத்தடுத்து இவர் நடித்த படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன.இவரும் கே.பாலச்சந்தரும் இணைந்து பணியாற்றிய எல்லா படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்ப்பைப் பெற்றன.

இதனிடையே தனது 25ஆவது திரைப்படமான அபூர்வ ராகங்கள் இவருக்கு சிறந்த நடிகருக்கான முதல் பிலிம்பேர் விருதினை பெற்றுத் தந்தது.1983ம் ஆண்டு இயக்குனர் பாலு மகேந்திரா இயக்கிய மூன்றாம் பிறை திரைப்படத்தில் நடித்தார்.இந்த படம் மூலம் சிறந்த நடிகருக்கான இந்திய தேசிய விருது இவருக்கு கிடைத்தது.மேலும் 1987ம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நாயகன் திரைப்படத்தில் நடித்ததற்காக 2வது தேசிய விருதும் பெற்றார்.பின்னர் 1996ம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கிய இந்தியன் திரைப்படத்திலும் 3வது முறையாக தேசிய விருது பெற்றார்.

இவர் 1979ம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருதும்,1990ல் இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதும்,2014ல் பத்மபூஷன் விருதும்,2016ல் பிரான்ஸ் நாட்டின் செவாலியே விருதும் பெற்றார்.62 ஆண்டு கால இவரது திரைப்பயணம் ஈடு இணையற்ற ஒன்றாகும்.இன்றளவும் அவர் தமிழ் சினிமாவில் உத்வேகமாக பணியாற்றி வருவது ஆச்சரியமளிக்கும் விதமாக உள்ளதென அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

author avatar
Parthipan K