ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும்! அரசு திட்டவட்டம்!
இந்தியாவின் பல மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கின்றன.பொது மக்களும் கட்டுப்பாடுகளை பின்பற்றியே வருகின்றனர்.மாநில அரசு தங்களின் கொரோனா தொற்று எண்ணிக்கைகளின் அடிப்படையில் ஊரடங்கை தளர்த்தியும் தொடர்ந்தும் வருகிறது.
இதனிடையே மேற்கு வங்க அரசானது ஊரடங்குக் கட்டுப்பாடுகளை ஆகஸ்ட் 31 வரை நீட்டித்துள்ளது.இரவு நேர ஊரடங்கில் சிறிது மாற்றம் கொண்டு வந்துள்ளது அம்மாநில அரசு.இதற்கு முன்பு இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அறிவித்திருந்த நிலையில் தற்போது 11 மணி முதல் காலை 5 மணி வரை மாற்றம் செய்துள்ளது.திரையரங்குகள் மற்றும் நீச்சல் குளங்கள் வரும் ஞாயிறு முதல் 50 சதவீத பயனாளர்களுடன் செயல்படலாம் என அரசு தளர்வுகள் அறிவித்துள்ளது.
அதேபோல் உள்ளூர் ரயில்கள் ஆகஸ்ட் 31 வரை இயங்காது எனவும்,விரைவாக ரயில்களை அனுமதிக்க முயற்சித்து வருவதாகவும் அம்மாநில முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி 50 சதவீதம் செலுத்திய பின்னரே ரயில் போக்குவரத்தை அனுமதிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.மேற்கு வங்க மக்கள் அனைவரும் 3வது அலையை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
ஏற்கனவே ஆகஸ்ட் 15 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதித்தாலும்,அரசு நிகழ்ச்சிகளை 50 சதவீத பார்வையாளர்களுடன் தற்போது அனுமதிப்பதாகவும் கூறினார்.மேலும் பேருந்து,டாக்ஸி மற்றும் ரிக்சா ஆகிய போக்குவரத்துக்களையும் 50 சதவீத பயணிகளுடன் இயக்க உத்தரவிட்டார்.அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் 50 சதவீத பணியாளர்களை வைத்து பணியை நடத்தவும் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.இந்த அறிவிப்பால் மேற்கு வங்க மக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.