நோய்த்தொற்று பரவல் இருக்கின்ற சூழலால் சுதந்திர தின நிகழ்ச்சிகளை காண்பதற்கு பொதுமக்கள் யாரும் நேரில் வர வேண்டாம் என்று தமிழக அரசு சார்பாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
இதுதொடர்பாக தமிழக அரசு சார்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி காலை 9 மணி அளவில் தேசிய கொடியை ஏற்றி வைப்பார். ஒவ்வொரு வருடமும் சுதந்திர தின நிகழ்ச்சியில் சுதந்திரப் போராட்ட தியாகிகளும், பொதுமக்களும், மாணவர்களும், பள்ளி குழந்தைகளும் பங்கேற்று கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நோய் தொற்று அதிகமாக இருப்பதால் இந்த சூழ்நிலையை கருத்தில் வைத்து இந்த வருடம் பள்ளி குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் செய்திடும் கலைநிகழ்ச்சிகள் தடுக்கப்பட்டிருக்கிறது. சுதந்திர போராட்ட வீரர்களின் வயது மூப்பினை கருத்தில் வைத்தும், நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும், விதமாக மாவட்ட வாரியாக சுதந்திர போராட்ட வீரர்களின் வீடுகளுக்கு சென்று அதிகாரிகள் மூலமாக பொன்னாடை போர்த்தி அவர்களுக்கு மரியாதை செலுத்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு இருக்கிறது.
ஆகவே சுதந்திர தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி மற்றும் வானொலியில் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. கூட்டத்தை தவிர்க்கும் விதத்தில் இந்த வருடம் பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் அதோடு சுதந்திர போராட்ட வீரர்கள் விழாவை காண நேரில் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. சுதந்திர தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி மற்றும் வானொலியில் கண்டும், கேட்டும் மகிழ வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.