நங்கூரமாய் நிலைத்து நிற்கும் பெட்ரோல் டீசல் விலை! மன மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்!

0
127

இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையை பொறுத்தவரையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

இந்தியா முழுவதும் நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்காக மார்ச் மாதம் முதல் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை. அதுவரையில் பொறுமையாக இருந்த எண்ணை நிறுவனங்கள் தற்சமயம் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி வருகின்றன.

இந்தியாவில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆக இருந்து வரும் இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன.

இந்த சூழ்நிலையில், தொடர்ச்சியாக இருபத்தி எட்டாவது நாளாக இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு102 ரூபாய் 49 காசுக்கும், டீசல் ஒரு லிட்டருக்கு 94 ரூபாய் 39 காசுக்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.