தமிழகத்தில் 2021 மற்றும் 22 ஆம் வருடத்திற்கான பட்ஜெட் தாக்கல் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களால் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது காகிதம் இல்லாத டிஜிட்டல் பட்ஜெட்டை நிதியமைச்சர் தியாகராஜன் தாக்கல் செய்தார். சுமார் 3 மணி நேரம் நடந்தது இறுதிக்கட்டத்தை எட்டிய நேரத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தன்னுடைய முன்னோர்களை நினைத்து கண்கலங்கியபடி உரை நிகழ்த்தினார்.
அப்போது கடினமான மற்றும் இக்கட்டான சூழ்நிலையில், நிதிநிலை அறிக்கையை தயார் செய்வதற்கு உதவி புரிந்த முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய நன்றி. எங்களுடைய முன்னோடிகளான மறைந்த முதலமைச்சர் சி என் அண்ணாதுரை மற்றும் கருணாநிதி, நிதியமைச்சர் அன்பழகன், உள்ளிட்டோருக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
அத்தோடு அவர்களுடைய வழியில் நடை போடுவேன் என்னுடைய பாட்டனார் மறைந்த நீதிக்கட்சி pt ராஜன், தந்தை மறைந்த முதல் அமைச்சர் தியாகராஜன் அவர்களுக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் இல்லாமல் நான் இங்கே இருப்பதற்கான சாத்தியக்கூறு இல்லை. எனக்கு வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்தார்.
எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்த முதலமைச்சர் மற்றும் என்னுடன் பணிபுரிந்த அலுவலர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மாண்புமிகு சட்டசபையில் சபாநாயகர் நிதிநிலை அறிக்கைக்கு அவையின் அனுமதி பெற்றுத் தரவேண்டும் என்று கண் கலங்கியபடி மிகவும் உணர்ச்சிபூர்வமாக அவர் உரை எழுதியதாக சொல்லப் படுகிறது.