தமிழ் சினிமாவில் வடிவேலுவுடன் நடித்த நடிகர் மறைவு! ரசிகர்கள் வருத்தம்!

0
117
Vadivelu's co-actor died
Vadivelu's co-actor died

தமிழ் சினிமாவில் வடிவேலுவுடன் நடித்த நடிகர் மறைவு! ரசிகர்கள் வருத்தம்!

தமிழ் சினிமாவில் வடிவேலுவுடன் பல திரைப்படங்களில் இணைந்து நடித்த காமெடி நடிகர் காளிதாஸ் நேற்று காலமானார்.கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று காலமானார்.இவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.சின்னத்திரையில் இந்திரா சௌந்தர்ராஜன் கதையில் கே.பாலச்சந்தர் தயாரிப்பில் உருவான திகில் தொடரான மர்மதேசம் தொடருக்கு இவர் குரல் கொடுத்திருந்தார்.கணீர் குரலுக்கு சொந்தக்காரரான இவர் டப்பிங் கலைஞர் ஆவார்.இவர் பல வில்லன் நடிகர்களுக்கும் குரல் கொடுத்துள்ளார்.

தமிழிலில் ஒரு திரைப்படத்தில் வடிவேலுவுடன் காளிதாஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.இந்த படத்தில்,தண்ணிய போட்டுத் தொட என்ற காமெடி காட்சியில் அவர் நடித்திருப்பார்.இன்னும் பல திரைப்படங்களிலும் காளிதாஸ் வடிவேலுவுடன் இணைந்து பல நகைச்சுவைக் காட்சிகளில் கலக்கி இருப்பார்.

கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்துள்ளார் இவர்.இந்நிலையில்,சிகிச்சை பலனின்றி நேற்று காளிதாஸ் உயிரிழந்துள்ளார்.இந்த செய்தியை குணச்சித்திர நடிகர் மோகன் ராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.அவரின் குரலை இனிமேல் கேட்க முடியாது.நடிகர்,டப்பிங் ஆர்டிஸ்ட்,வில்லன்களுக்கு தனது குரல் மூலம் சக்தி கொடுத்தவர் இறந்துவிட்டார் என பதிவிட்டுள்ளார்.இவரின் மனைவி வசந்தா இறந்து விட்டார்.இவருக்கு விஜய்,பார்கவி என்று இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

வெள்ளித்திரை,சின்னத்திரை என அனைத்திலும் தடம் பதித்த காளிதாஸ் உயிரிழந்துள்ளது சினிமாத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.அவரின் மறைவுக்கு சினிமா உலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.ரசிகர்களும் அவர்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.இவரின் இறுதிச்சடங்கு சென்னை போரூரில் இன்று நடைபெறுகிறது.

author avatar
Parthipan K