வேளாண் பட்ஜெட்! முக்கிய திட்டத்திற்காக ரூபாய் 21.80 கோடி ஒதுக்கீடு!

0
132

தமிழ்நாட்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று காலை 10 மணியளவில் ஆரம்பமானது தமிழ்நாட்டின் 2021 மற்றும் 2022ஆம் நிதி ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து இன்று காலை முதல் முறையாக தமிழகத்தின் வேளாண் துறைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதி நிலை அறிக்கையை வேளாண் துறை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

நீர் பற்றாக்குறையை போக்கும் விதத்தில் இந்த வருடத்தில் சொட்டு நீர் பாசன முறை 20 ஆயிரம் ஏக்கர் அளவில் அமைக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தென்னை மரங்களில் உண்டாகும் பாதிப்புகளை குறைப்பதற்காகவும், தென்னை மரங்களை உண்டாகும் வெள்ளை ஈ தாக்குதல் போன்றவற்றை சமாளிக்கவும், பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல தென்னை சாகுபடி திட்டத்திற்காக 10.20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.

அதேபோல அண்ணா பண்ணை மேம்பாட்டு திட்டத்திற்காக ரூபாய் இருபத்தி 1.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை அருகில் 21.80 கோடி செலவில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அண்ணா பண்ணை மேம்பாடு திட்டம் செயல்படுத்தப்பட்டு அண்ணா பன்முக வேளாண் செயல்விளக்க விதை துணையாக அது உயர்த்தப்படும் என்று தெரிவித்திருக்கின்றார் வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்.

Previous articleவிழுப்புரத்தில் இளைஞர் ஒருவர் கடை மற்றும் பாத்திரத்தை அடித்து நொறுக்கும் வீடியோ காட்சி!
Next articleதிமுக போட்ட பிளான்! முன்கூட்டியே அறிந்த முன்னாள் சிஎம்! நகைக்கடன் தள்ளுபடி செய்ய வாய்ப்பே இல்லை!