திமுக போட்ட பிளான்! முன்கூட்டியே அறிந்த முன்னாள் சிஎம்! நகைக்கடன் தள்ளுபடி செய்ய வாய்ப்பே இல்லை!

0
83
DMK plan! Former CM who knew in advance! No chance to discount jewelry!
DMK plan! Former CM who knew in advance! No chance to discount jewelry!

திமுக போட்ட பிளான்! முன்கூட்டியே அறிந்த முன்னாள் சிஎம்! நகைக்கடன் தள்ளுபடி செய்ய வாய்ப்பே இல்லை!

அதிமுக மற்றும் திமுக ஆட்சியின் போது பல நலத்திட்டங்களை செய்வதாக கூறி மக்களிடம் வாக்குகளை கேட்டனர்.அதில் அதிமுக அரசு நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கியில் வைத்துள்ள 5 பவுன் நகை வரை தள்ளுபடி செய்யப்படும் என கூறினார்.அதனையடுத்து தேர்தலில் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் திமுக ஆட்சியை கைப்பற்றியது.திமுக ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து சில விலை வாசிகள் உயர்ந்த நிலையில் தான் உள்ளது.பல நலத்திட்டங்களை செய்து வருகிறது.

அதுமட்டுமின்றி திமுக கூறிய முக்கிய நலத்திட்டமான குடும்ப தலைவிகளுக்கு மாதம் 2000 திட்டம் இன்றும் நிறைவேற்றவில்லை.சிலிண்டர் விளையும் தற்போது அதிகரித்துள்ளது.இதனை அனைத்தையும் தற்போது முன்னாள் முதல்வர் சொல்லிக்காட்டி விமர்சித்து வருகிறார்.அதில் அவர் கூறியது,நேற்று கூட்டுறவுத்துறை நகைகடன் சேகரிப்பு நடத்துமாறு ஓர் அறிவிப்பை வெளியிட்டது.இதன் பின்னணி பெரிய திட்டம் ஒன்று நடைபெற்று வருகிறது என்று எடப்பாடி கூறினார்.

ஏச்சு பிழைக்கும் தொழிலே சரிதானா? எண்ணிப் பாருங்கள் ஐயா! எண்ணிப் பாருங்கள் ஐயா! என்ற புரட்சி தலைவரின் பாட்டு தான் எனக்கு சிந்தனைக்கு வருகிறது என்று கூறினார்.ஏனென்றால் ஏமாறுவதற்கு ஆட்கள் இருக்கும் வரை ஏமாற்றி ஆட்சி நடத்துவது தான் திமுக.அந்தவகையில் தற்போது நகைக்கடன் தள்ளுபடியில் பல திருப்பங்களை நாம் காணலாம்.பல கட்டுப்பாடுகளை திமுக விதித்து இந்த கட்டுபாடுகளுடன் இருப்பவர்களுக்கு தான் நகை தள்ளுபடி என்று கூற போகிறது என்றார்.

அந்த கட்டுப்பாடுகள்,மத்திய-மாநில அரசு ஊழியராக இருக்கக்‌ கூடாது,வருமான வரி செலுத்துபவராக இருக்கக்‌ கூடாது,ஆண்டு வருவாய்‌ ஒரு லட்சத்திற்குமேல்‌ இருக்கக்‌ கூடாது,கூட்டுறவு சங்கங்களில்‌ பணிபுரியக்‌ கூடாது,குடும்பத்தில்‌ ஒருவர்‌ மட்டுமே கடன்‌ பெற்றிருக்க வேண்டும்‌ போன்ற கட்டுப்பாடுகளை போட்டு பல பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடைக்காமல் செய்ய போகிறார்கள் என கூறினார்.மக்கள் 2018 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை வைக்கப்பட்ட நகைகள் அனைத்தும் தள்ளுபடி என நினைத்து மகிழ்ந்தனர்.

ஆனால் தற்போது திமுக அரசு இவ்வாறு கட்டுப்பாடுகளை நியமிப்பதால் மக்கள் ஏமாற்றத்தையே அடைவர் என்று கூறினார்.மேலும் அவர் புரட்சி தலைவரின் மற்றொரு பாட்டான எத்தனை காலம் தான் ஏமாற்றுவாய் என்ற பாடலையும் பாடினார்.தற்பொழுதுதான் திமுக அரசை மக்கள் குறை கூற ஆரம்பித்துள்ளனர்.திமுக ஆட்சிக்கு வந்தால் நாங்கள் நிறைவேற்றுவோம் என 505 அறிக்கைகளை சர்வசாதரணமாக கூறிவிட்டது.இதனையெல்லாம் நிறைவேற்ற முடியாமல் தான் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டுமே என்ற போக்கில் நாட்டில் இவ்வளவு கடன் உள்ளது என புதிதாக கூறுவது போல் வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்தனர்.

இதன் மூலம் கடன் அதிகமாக நாட்டில் உள்ளது.அதனால் கூறிய அறிக்கையை நிறைவேற்றுவது கடினம் என்பதை வெளிப்படையாக உரைத்துவிட்டனர் என முன்னாள் முதல்வர் எடப்பாடி கூறினார்.மக்கள் இதையெல்லாம் பார்த்து போராட்டத்தில் இறங்குவதற்குள்,திமுக தன்னை சரிபடுத்திக்கொண்டு நல்லாட்சி அமைய வழி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.அதுமட்டுமின்றி 5 பவுன் வரை நகை அடமானம் வைத்த நகைக்கடனை சாக்குபோக்கு சொல்லாமல் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.