ரூ.100 க்கு கேஸ் ரீபேர் பார்க்க சொன்னால் ரூ.1 லட்சத்துக்கு ஆப்பு வச்சுட்டாங்க! வந்தவனை வெளுத்து வாங்கிய போலீஸ்!
இந்த காலக்கட்டத்தில் மக்கள் அன்றாட வீட்டில் உள்ள பொருட்களை பழுதுபார்க்க,தெருக்களில் முன் பின் தெரியாத நபர்களை கூட அழைத்துவிடுகின்றனர்.அதுமட்டுமின்றி அவர்களில் பலர் திருட்டு வேடத்தில் பழுது பர்ப்பவர்கள் போல உள்ளவர்கள் என்று தெரிவதில்லை.அந்தவகையில் மக்கள் பலர் அவர்களிடம் மாட்டிக்கொள்கின்றனர்.அவ்வாறு திருப்பூர் அருகே நடைபெற்ற ஓர் சம்பவம் அரங்கேறியுள்ளது.திருப்பூர் அருகே பெருமாநல்லூர் என்ற பகுதி உள்ளது.
அந்த பகுதியில் வசித்து வருபவர் தான் சுரேஷ் மற்றும் சகுந்தலா.இவர்கள் பல வருடங்களாக அந்த பகுதியில் தான் வசித்து வந்துள்ளனர்.சுரேஷ் காலை நேரத்தில் வேலைக்கு சென்று விட்டால் மீண்டும் மாலை நேரம் தான் வருவார்.அவர் வேலைக்கு சென்ற நேரத்தில் அவர்களது வீட்டில் உள்ள அடுப்பு ஏதோ பழுதாகிவிட்டது.அப்போது சகுந்தலா அவர் வீட்டின் முன் கேஸ் ரீபேர் என்று கூறி சென்றவரை அழைத்து சரி பார்க்க சொல்லியுள்ளார்.
அவர் கேஸை ரீபேர் செய்வது போல செய்துவிட்டு சமையலறையில் உள்ள 3 பவுன் தங்க சங்கலியை திருடி சென்றுள்ளார்.அதனையடுத்து அந்த கேஸ் பழுது பார்ப்பவர் சென்ற பிறகு சகுந்தலா சமையலறை சென்று பார்த்துள்ளார்.அப்போது அங்கு வைத்திருந்த மூன்று பவுன் தங்க சங்கலி காணமால் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.அதனையடுத்து சகுந்தலா தனது கணவருக்கு இவ்வாறு நகை காணாமல் போனதை பற்றி கூறினார்.
அதனையடுத்து இருவரும் சேர்ந்து போலீசாரிடம் புகார் அளித்தனர்.அந்த புகாரை வழக்கு பதிவு செய்து போலீசார் அந்த மர்ம நபரான கேஸ் பழுது பார்ப்பவரை தேடி வந்தனர்.கடைசியாக அந்த நபர் போலீசார் கையில் வசமாக சிக்கினார்.அவர் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அஜித் என்பது தெரிய வந்தது.மேலும் போலீசார்,அவரிடம் இருந்த நகையை மீட்டு அந்த தம்பதியினரிடம் கொடுத்தனர்.அதுமட்டுமின்றி வீட்டில் உள்ள பொருட்களை பழுது பார்க்க வேண்டுமென்றால் தெரிதவர்களை வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டும் என்று போலீசார் கேட்டுக்கொண்டார்.