உலகக்கோப்பை டி20 கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் விளையாடுமா? கிரிக்கெட் வாரியம் விளக்கம்!

Photo of author

By Parthipan K

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் விளையாடுமா! கிரிக்கெட் வாரியம் விளக்கம்!

ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான் தாக்குதல் நடந்து வருவதால் அந்நாட்டில் பெரும்பாலான இடங்களில் பரப்பான சூழ்நிலை நிலவுகிறது.இந்நிலையில் இந்த வருடம் நடக்கவிருக்கும் உலகக்கோப்பை டி20 போட்டிகளில் ஆப்கானிஸ்தானும் பங்கு கொள்கிறது.இந்த சூழ்நிலையில் ஆப்கானிஸ்தான் அணி இந்த போட்டிகளில் விளையாடுமா என சந்தேகம் நிலவுகிறது.

டி20 உலகக்கோப்பை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறவிருக்கிறது.அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை போட்டிகள் நடைபெறுகிறது.துபாய்,அபுதாபி,சார்ஜா,ஓமன் ஆகிய மைதானங்களில் போட்டிகள் நடைபெறும்.இந்த போட்டிகள் முதலில் இந்தியாவில் நடைபெறுவதாக இருந்தது,பிறகு கொரோனாத் தொற்று காரணமாக மாற்றப்பட்டது.

அமெரிக்க தூதுவர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து அவர்கள் நாட்டிற்க்கு கொண்டுவரப்பட்டனர்.தாலிபான்கள் வேகமாக ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றி வருவதால் அந்நாட்டில் அசாதாரணன் சூழல் நிலவுகிறது.இந்நிலையில் மக்கள் அனைவரும் தலைநகர் காபூலில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.அதிபர் அஷ்ரப் கனி நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.மேலும் தாலிபான்கள் போரை நிறுத்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த வருடம் உலகக்கோப்பை டி20 போட்டிகளில் ஆப்கானிஸ்தான் நிச்சயமாக பங்கேற்கும் என தெரிவித்துள்ளது.மேலும் காபூலில் விரைவில் அந்நாட்டு கிரிக்கெட் அணி பயிற்சியில் ஈடுபடும் எனவும் தெரிவித்துள்ளது.ஆஸ்திரேலியா,மேற்கு இந்தியதீவு ஆகிய நாடுகளுடன் முத்தரப்பு தொடரும் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

மேலும் டி20 பயிற்சி போட்டிகளும் நடத்த திட்டமிட்டுள்ளோம்.பாகிஸ்தான்,இலங்கை நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.மலேசியா நாட்டிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.இவ்வாறு ஆப்கானிஸ்தான் ஊடக மேலாளர் ஹிக்மத் ஹாசன் தனது பெட்டியில் கூறியுள்ளார்.இந்நிலையில் அனைத்து அணிகளும் உலகக்கோப்பைக்கு ஆயத்தமாகி வருகின்றன.ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது கிரிக்கெட்டில் முன்னேறிவருவது குறிப்பிடத்தக்கது.