மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி! கர்நாடக முதல்வர் பிடிவாதம்!

0
74

தமிழகம் மற்றும் கர்நாடகாவிற்கு இடையேயான தண்ணீர் பிரச்சனை பல வருட காலமாக தொடர்ந்து வருகிறது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் கர்நாடக அரசு உரிய நீரை தமிழகத்திற்கு கொடுப்பதில்லை. இந்த நிலையில், தற்சமயம் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடக அரசு தெரிவித்து வருகிறது. தமிழ்நாடு தண்ணீரை அதிக அளவில் வீணாக்குவதாகவும் ஆகவே அணை கட்டி நீரைத் தேக்கி தமிழகத்திற்கு வழங்குவோம் என்றும் கர்நாடக அரசு தெரிவித்திருக்கிறது.

இருந்தாலும் அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டிற்கு இப்போது கிடைக்கும் நீர் கூட கிடைக்காது என்று தமிழக விவசாயிகள் தெரிவித்து வருகிறார்கள். இரு மாநிலங்களும் மத்திய அரசை நம்பி இருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு பேருந்து மிக விரைவில் அனுமதி கிடைக்கும் என்று கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். உச்சநீதிமன்றம், காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் கூடுதல் நீரை தமிழ்நாட்டிற்கு வழங்குவதற்கு இந்த அணை உதவி புரியும் என்று தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்தாலும் நாங்கள் மேகதாதுவில் புதிய அணை கட்டியே தீருவோம் என்று அவர் கூறியிருக்கிறார். இந்த திட்டத்தில் இருந்து கர்நாடக அரசு பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. இது குடிநீருக்கும், மின் உற்பத்திக்கும், மிகவும் அவசியமானது என்று தெரிவித்தார்.