சமீபத்தில் நடைபெற்ற தமிழக பட்ஜெட் தாக்கலின் விவாதம் நேற்றைய தினம் சட்டப் பேரவையில் நடந்தது இதில் அதிமுக மற்றும் திமுக சட்ட சபை உறுப்பினர்களிடையே தங்களுடைய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது தொடர்பாக காரசாரமான விவாதம் நடைபெற்று வந்தது.
அதிலும் குறிப்பாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்குவதாக தெரிவித்து இருப்பது எந்த விதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். இந்த நிலையில் இன்றைய தினம் ஆரம்பமான இரண்டாவது நாள் பட்ஜெட் விவாதத்தில் அதிமுகவின் சட்டசபை உறுப்பினர் ராஜன்செல்லப்பா பன்னிரண்டாம் வகுப்பில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று விட்டதால் கல்லூரிகளில் கூடுதல் இடத்தை ஒதுக்குவதற்கான கோரிக்கையை முன்வைத்தார்.
இதற்கு பதிலளித்த தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கல்லூரியில் இருக்கின்ற இடத்திலேயே 25 சதவீத இடத்தை அதிகரித்துக் கொள்ளலாம் என்று தெரிவித்தார் அதேபோல டீசல் விலையை குறைக்காமல் இருப்பது ஏன் என்று அதிமுக சட்டசபை உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு டீசல் விலையை குறைப்பதன் மூலமாக அதன் பயன் பொது மக்களுக்கு நேரடியாக போய் சேருமா என்று சொல்ல இயலாது என்று தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில் தந்தார்.அதோடு பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்டவற்றை பயன்படுத்துபவர்களின் உரிய தகவல்கள் தமிழக அரசிடம் கிடையாது பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், உள்ளிட்ட நிறுவனங்களும் அந்த தகவல்களை எங்களுக்கு கொடுக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
தமிழக அரசின் ஆய்வு ஒன்றில் நான்கு முதல் ஐந்து வகையான பெட்ரோல் பயன்பாடுகள் தற்சமயம் நடைமுறையில் இருக்கிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது பெட்ரோல் விலை குறைப்பின் காரணமாக 2 கோடி பேர் நேரடியாக அந்த பயனை அனுபவித்து வருகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.இதுகுறித்த விவரங்களை சேகரித்து வருகிறோம் 30 தினங்களில் இந்த தகவல்கள் முழுமையாக கிடைக்கப்பெறும் அதனை வைத்து இன்னும் கூடுதலான பயனளிக்கக்கூடிய முடிவு எடுப்பது தொடர்பாக ஆராய்ச்சி செய்யப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கின்றார்.