டிஜிட்டல் பட்ஜெட்! திமுகவிற்கு பாராட்டுப் பத்திரம் வாசித்த அதிமுக எம்எல்ஏ!

0
141

தமிழகத்தில் எப்பொழுதும் ஏப்ரல் மாதம்தான் பட்ஜெட் தாக்கல் செய்வார்கள் ஆனால் கடந்த சில வருடங்களாக பிப்ரவரி மாதத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அதோடு முன்பு காகிதங்களுடன் கூடிய பட்ஜெட்தான் தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்படும்.அதனை மாற்றும் விதத்தில் இந்த ஆண்டு தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக காகித டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. பட்ஜெட் குறித்த விவரங்கள் அந்தந்த சட்டசபை உறுப்பினர்களின் முன்னால் வைக்கப்பட்டிருக்கும் கணினியில் ஒளிபரப்பப்படும் அதனை அனைவரும் காணலாம் என்று சொல்லப்படுகிறது.

அந்த விதத்தில் தமிழகத்தில் முதல் முறையாக தாக்கல் செய்யப்பட்ட காகிதம் அல்லது டிஜிட்டல் பட்ஜெட்டிற்கு அதிமுகவின் சட்டசபை உறுப்பினர் ராஜன் செல்லப்பா பாராட்டு தெரிவித்திருக்கிறார். முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பட்ஜெட் கடந்த 13ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதனை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

இந்த சூழ்நிலையில், இன்றைய தினம் கேள்வி நேரத்தில் தமிழக அரசின் டிஜிட்டல் பட்ஜெட்டிற்கு பாராட்டுக்கள் என்று அதிமுகவின் சட்டசபை உறுப்பினர் ராஜன் செல்லப்பா தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர் சட்டசபையில் பட்ஜெட் தாக்கலின்போது அனைத்து சட்டசபை உறுப்பினர்களின் மேடைகளிலும் கணினி வைக்கப்பட்டிருந்ததால் அதனை படிப்பதற்கு மிகவும் எளிதாக இருக்கிறது. சட்டசபை உறுப்பினர்கள் கணினியின் பயன்பாடு கற்றுக்கொள்ளவும் முடிவதாக அதிமுகவின் சட்டசபை உறுப்பினர் ராஜன் செல்லப்பா திமுக அரசுக்கு பாராட்டு தெரிவித்தார்.

தமிழக பட்ஜெட் போல அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் கணினிமயமாக்க அதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார். இதற்கு பதில் அளித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் புத்தகம் பயன்பாட்டை குறைப்பதற்காக காகிதம் இல்லாத டிஜிட்டல் பட்ஜெட் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், ஆனாலும் 400 புத்தகங்கள் அச்சிடப்பட்டு தேவைப்படும் உறுப்பினர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வருவதாகவும், அவர் விளக்கம் கொடுத்தார் அத்துடன் மதுரையில் புதிதாக திறக்கப்பட்ட இருக்கின்ற நூலகத்திலும் புத்தகங்களுடன் டிஜிட்டல் புத்தகங்கள் இடம் பெறும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார்.