தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் இருக்கக்கூடிய முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் விறுவிறுப்பாக போட்டியிட்டார்கள். அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட மிகப் பெரிய கட்சிகளும் இதில் போட்டியிட்டனர் அதோடு பாரதிய ஜனதா கட்சியும் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த முறை தமிழக தேர்தல் களத்தில் மிகவும் துடிப்புடன் பணியாற்றியது.
இந்த நிலையில், ஆளும் கட்சியாக இருந்த அதிமுக எழுபத்தி ஆறு தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து வெற்றி பெற்று சட்டசபையின் எதிர்க்கட்சியாக அமர்ந்தது. அதேசமயம் எதிர்க்கட்சியாக திமுக சுமார் 125 இடங்களில் தனித்து வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது இதன் காரணமாக, அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் கடந்த மே மாதம் 7ஆம் தேதி முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த முறை தமிழக தேர்தல் களத்தில் துடிப்புடன் செயல்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் அப்போதைய தலைவராக இருந்த முருகன் தமிழகத்தில் நடக்கும் சட்டசபை தேர்தலில் பாஜக வேட்பாளரை வெற்றிபெற வைக்கும் மாவட்ட தலைவர்களுக்கு தமிழக பாஜக சார்பாக இனோவா கார் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
அதேபோல சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் பாஜக சார்பாக நான்கு சட்டசபை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதனடிப்படையில் பாஜகவின் வேட்ப்பாளர்கள் வருமாறு நாகர்கோவிலில் எம் ஆர் காந்தி, கோவை தெற்கு தொகுதி வானதி ஸ்ரீனிவாசன், திருநெல்வேலி தொகுதி நயினார் நாகேந்திரன், மொடக்குறிச்சி தொகுதி சரஸ்வதி உள்ளிட்டோர் வெற்றி அடைந்து சட்டசபைக்குள் முதன்முறையாக சென்றிருக்கிறார்கள்.
அவர்களை வெற்றி பெற வைத்த மாவட்டங்களாக இருந்து வரும் ஈரோடு , திருநெல்வேலி, நாகர்கோவில், கோயமுத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சார்ந்த பாஜகவின் தலைவர்களுக்கு இன்று சென்னை தி நகரில் இருக்கின்ற கமலாலயத்தில் மத்திய இணை அமைச்சர் முருகன் புதிய இன்னோவா காரை பரிசாக வழங்க இருப்பதாக சொல்லப்படுகிறது.