எங்களுக்கு இனி எண்டு கார்டே இல்லை! அடுத்த எய்ம் பாரிஸ் ஒலிம்பிக் தான்!
தற்பொழுது இந்தியா, ஜப்பானின் டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு பல தங்கம் வெள்ளி வெண்கலம் போன்ற பதக்கங்களை வென்று குவித்தது. தடகள போட்டியில் கலந்து கொண்ட நிரஜ் சோப்ராவுக்கும் அதிக பாராட்டுகள் கிடைத்தது. ஏனென்றால் சென்ற வீரர்களின் இவர் ஒருவரே இந்தியாவிற்கு தங்க பதக்கத்தை வாங்கிக்கொடுத்தார். மேலும் பிவி சிந்து இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை பெற்றார் அதேபோல குத்துச்சண்டையில் உம் மூன்றாவது இடத்தைப் பிடித்த இந்தியர் என்ற பெயரை வோவ்லினா வாங்கிக்கொடுத்தார்.
இந்திய ஆடவர் ஹாக்கி அணியானது 41 வருடங்களாக எந்த ஒரு ஒலிம்பிக் பதக்கத்தையும் வெல்லவில்லை 41வருடங்கள் கழித்து இந்திய ஆடவர் ஹாக்கி அணி தற்போது தான் ஒலிம்பிக் பதக்கத்தை பெற்றுள்ளது.இது அனைவருக்கும் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி செல்ல உள்ளோம் என்பதை எடுத்துரைப்பது போல் இருந்தது.இவர்களைப் போலவே மீராபாய் சானு பளுதூக்கல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார் மேலும் மல்யுத்த போட்டியில் ரவி குமார் என்பவரும் வெள்ளிப் பதக்கத்தை வென்று நம் இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்துக் கொடுத்தார்.
இந்தியாவின் மற்றொரு மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியா என்பவர் வெண்கலம் பெற்றார். இவரது வெற்றியை கொண்டாட மத்திய அரசு மற்றும் மாநில அரசு அவர்களை சுற்றி உள்ள மாவட்டங்கள் அனைவரும் பரிசுகளை அள்ளிக் கொடுத்து இவர்களை பரிசு மழையில் நிறைய வைத்தனர். குறிப்பாக தங்கப்பதக்கம் வென்ற நிறஜ் சோப்ராவுக்கு அதிகப்படியான பரிசுகள் வழங்கப்பட்டது. இதனையடுத்து தங்களுக்கு ஓய்வில்லை அடுத்த கட்டத்தை நோக்கி செல்கிறோம் என்பதை கூறும் விதத்தில் கர்நாடக அரசு தற்பொழுது 2024 யில் வர இருக்கும் பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு வீரர்களை தயார் செய்ய தனிப்படை குழு ஒன்றை அமைத்துள்ளது.
இந்த குழுவானது பாரிஸ் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள திறமையான 75 வீரர்களை கண்டறிவதே இவர்களின் தலையாய நோக்கம் என கர்நாடக அரசு கூறியுள்ளது. இந்தக் குழுவானது எட்டு பேர் கொண்ட உயர்மட்ட குழுவை அமைத்து தேர்ந்தெடுக்கப்படும் என்று கூறியுள்ளனர்.இந்த குழுவின் தலைமை இளைஞர்களே தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மற்றும் அறிவியல் முறையில் வீரர்களை திறமையாக கண்டுபிடித்த விளையாட்டு துறை அமைச்சர் கே சி நாராயண கவுடா தலைமையில் நடைபெறும் என கூறியுள்ளனர்.