தமிழக பாஜக தலைமையைக் கண்டு அஞ்சி நடுங்கும் திமுக

0
65

தமிழகத்தில் நோய்த்தொற்று பரவல் காரணமாக, கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.தமிழகத்தில் நோய்த்தொற்று பரவல் மெல்ல, மெல்ல குறைந்ததை தொடர்ந்து ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், திடீரென மீண்டும் நோய்த்தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியது.இதனால் மறுபடியும் ஊரடங்கு கடுமைப்படுத்தப்பட்டது இதனால் பல இடங்களில் ஊரடங்கு தளர்வு கடுமையாகி இருக்கின்றன.

இதற்கிடையில் திருநெல்வேலியில் விடுதலைப் போராட்ட வீரரான ஒண்டிவீரன் அவர்களின் 250 ஆவது நினைவு தினத்தை அனுசரிக்க திட்டமிடப்பட்டு அதனை முன்னிட்டு விமானம் மூலமாக தூத்துக்குடி வந்த மத்திய இணையமைச்சர் முருகன், தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை, உள்ளிட்டோருக்கு பாரதிய ஜனதா கட்சியினர் உற்சாக வரவேற்பு கொடுத்தார்கள். இதனையடுத்து இருவரும் சாலை மூலமாக திருநெல்வேலி பாளையங்கோட்டையில் இருக்கின்ற சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் மணிமண்டபத்துக்கு சென்று மரியாதை செலுத்தி இருக்கிறார்கள்

இந்த சம்பவத்தின்போது மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த நிர்வாகிகள் சிபி ராதாகிருஷ்ணன், துரைசாமி, மாவட்ட தலைவர் மகாராஜன், உள்ளிட்ட பலர் அருகில் இருந்ததாக சொல்லப்படுகிறது.இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த பாஜகவின் தலைவர் அண்ணாமலை 100 தினங்களில் தேர்தல் வாக்குறுதிகளில் சொன்னதைச் செய்யாமல் திமுக அரசு எதிர்க்கட்சிகள் மீது காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நடவடிக்கை மேற்கொண்டு வருவது பொதுமக்களிடையே சலிப்பை உண்டாக்கி இருக்கிறது என்று தெரிவித்தார்.

இந்த சூழ்நிலையில், நோய்த்தொற்று விதிமுறைகளை மீறியதாக தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை உட்பட 95 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. நோய்தொற்று பரவும் விதத்தில் கூட்டத்தை கூடுதல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் பாளையங்கோட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஆனால் தமிழக அரசின் இந்த நடவடிக்கை தனிப்பட்ட முறையில் அண்ணாமலையின் மீது இருந்த பகை உணர்வால் தான் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. காரணம் அவர் தமிழக பாஜகவின் தலைவராக பொறுப்பேற்ற நாள் முதல் திமுகவை அடிக்கடி நேரடியாக விமர்சனம் செய்து வருகிறார்.

இதனால் தமிழகம் முழுவதும் திமுகவின் செல்வாக்கு மெல்ல, மெல்ல சரிய தொடங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே பயந்து போன திமுக இவ்வாறு அவர் மீது வழக்கு பதிவு செய்து இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.