ஐயோ இந்த 68 லட்சம் வாகனங்களும் இரும்பு கடைக்கா? மத்திய அரசின் அடுத்த அதிரடி உத்தரவு!

0
128
Federal Government's Next Action Order!
Federal Government's Next Action Order!

ஐயோ இந்த 68 லட்சம் வாகனங்களும் இரும்பு கடைக்கா? மத்திய அரசின் அடுத்த அதிரடி உத்தரவு!

சில மாதங்களுக்கு முன்பே சில குறிப்பிட்ட வாகனகள் சாலைகளில் செல்வதற்கு தமிழக அரசு தடை விதிக்கப்போவதாக சில அறிவிப்புகள் வெளியானது.அதனையடுத்து தற்போது அதுபற்றிய விவரங்கள் தற்போது வெளிவந்துள்ளது.தற்பொழுது பழைய வாகனங்களால் காற்று அதிகளவு மாசுபட்டு வருகிறது,இதனை தடுக்க மத்திய அரசு புதிய வாகனம் என்ற திட்டத்தை கொண்டுவந்தது.அதன்படி 15 ஆண்டுகள் பழமையான வாகனத்தை சாலைகளில் ஓட்டுவதற்கு தடி வித்திருந்தனர்.அதை போலவே வணிக வாகனங்களாக இருந்தால் கூட 15 வருடங்கள் ஆனால் சாலைகளில் ஓட்டக்கூடாது என்ற திட்டத்தை அமல்படுத்தினார்.

அதனடிப்படையில் இந்தியா முழுவதும் 51 லட்சம் தனியார் வாகனங்கள் மற்றும் 17 லட்சம் வணிக வாகனங்கள் சாலைகளில் செல்ல தடைவிதிக்க பட்டியல் தயாராக உள்ளது.அதேபோல அதிலிருந்து மாநில ரீதியாக எவ்வளவு வாகனங்கள் சாலைகளில் செல்ல முடியாது என்ற பட்டிலையும் கூறியுள்ளனர்.அதில் பார்க்கும் போது நமது தமிழ்நாட்டில் மட்டும் 17 லட்சம் தனியார் மற்றும் வணிக வாகனங்கள் இனி சாலைகளில் செல்ல இயலாது என்று கூறியுள்ளனர்.இந்த திட்டம் அனைத்து மாநிலங்களுக்கும் விரைவில் அமலுக்கு வருவதாக கூறியுள்ளனர்.அவ்வாறு அமலுக்கு வரும் போது அனைத்து மாநில போலீசாரும் சாலையில் செல்லும் வாகனங்களை சோதனையிடுவர் என கூறியுள்ளனர்.

இந்த பயன்படுத்த முடியாத வாகனங்கள் அனைத்தும் இனி இரும்பு கடைகளுக்கு தான் போடா வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.இவ்வாறு பழைய வாகனங்களை பயன்படுத்த முடியாமல் இருப்பவர்களுக்கு புதிய வாகனங்கள் வாங்குவதற்கு சலுகை தருவதாகவும் கூறியுள்ளனர்.இவ்வாறு செய்வதினால் காற்று மாசுபடுவதை தடுக்க முடியும் என்று கூறுகின்றனர்.தமிழகத்தை போலவே தற்போது பஞ்சாப்பில் 15 லட்சம் வாகனங்கள் செயல்பட தடை வித்துள்ளத்தாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.மேலும் சற்று மாசு கட்டுப்பாடு உள்ள வாகனங்களை பயன்படுத்த அனுமத்திக்க மத்திய அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

Previous articleஆப்கனின் எதிரொலி! மேற்கு வங்கத்தில் இவர்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!
Next articleஇசை இதழின் அட்டைப்படத்தில் பாடகர் அறிவின் புகைப்படம் புறக்கணிப்பு! பிரபல இயக்குனர் விரக்தி!