ஆப்கனின் எதிரொலி! மேற்கு வங்கத்தில் இவர்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

0
72
Echo of Afghanistan! The plight of these people in West Bengal!
Echo of Afghanistan! The plight of these people in West Bengal!

ஆப்கனின் எதிரொலி! மேற்கு வங்கத்தில் இவர்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக உலக மக்கள் அனைவரும் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். ஒரு சிலர் வெளிப்படையாகவும், ஒரு சிலர் மறைமுகமாகவும் பாதிக்கப் பட்டு உள்ளனர் என்பது கவனத்தில் கொள்ளக் கூடியது. அதிலும் மேற்கு வங்கத்தை சேர்ந்த தலைப்பாகை தொழில் செய்தவர்கள் பெருமளவு பாதிப்படைந்துள்ளனர்.

மேற்கு வங்காளத்தில் உள்ள பங்குரா மாவட்டத்துக்கு உட்பட்ட சோனாமுக்கி என்ற பகுதியில் தயாராகும் தலைப்பாகைகள் பெருமளவில் ஆப்கானிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. எனவே இதை நம்பி 150க்கும் மேற்பட்ட தலைப்பாகை தயாரிப்பாளர்கள் அங்கு பணி செய்து வருகின்றனர். இந்த தொழிலினால், ஒருவர் மாதம் ஒன்றுக்கு 20 முதல் 50 வரை தலைபாகைகளை தயாரிக்க முடியும். இதன் ஆரம்ப விலை குறைந்தபட்சமாக ரூ.350 முதல் அதிக விலையாக ரூ.3,500 வரை விற்பனை ஆகிறது குறிப்பிடத் தக்கது.

எனவே அவர்களது வாழ்வாதாரம் ஓரளவு சிறப்பாக இருந்தது. ஆனால் தற்போது ஆப்கானிஸ்தானில் அரசியல் குழப்பம் மற்றும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதன் காரணமாக தலைப்பாகை ஏற்றுமதி செய்வது தற்போது தடை செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த தொழிலாளர்கள் வேலை இழக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே நாட்டிலிருந்த கொரோனா தொற்றின் காரணமாக அமல்படுத்தப் பட்டிருந்த போதும், ஊரடங்கின் காரணமாக தங்கள் தொழிலில் பெருமளவு பாதிக்கப்பட்டிருந்த தாகவும், தற்போது ஆப்கன் நிலவரமும் சேர்ந்து மொத்தமாக தங்களின் வாழ்வாதாரத்தையே இழந்து இருப்பதாகவும் அவர்கள் கண்ணீருடன் வேதனை தெரிவித்துள்ளனர். அரசு இதற்காக ஏதேனும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமா? எனவும் அவர்கள் கேட்டுள்ளனர்.